கிரிக்கெட்

கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் சிங் கவுரின் டி.எஸ்.பி பதவி பறிக்கப்பட வாய்ப்பு + "||" + Punjab govt may demote cricketer Harmanpreet Kaur from DSP to constable over fake degree

கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் சிங் கவுரின் டி.எஸ்.பி பதவி பறிக்கப்பட வாய்ப்பு

கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் சிங் கவுரின் டி.எஸ்.பி பதவி பறிக்கப்பட வாய்ப்பு
போலி சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் சிங் கவுரின் டி.எஸ்.பி பதவியை பறிக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சண்டிகார்,

இந்திய பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனும், அர்ஜூனா விருது பெற்றவருமான ஹர்மன்பிரீத் கவுருக்கு, பஞ்சாப் மாநில அரசு கடந்த மார்ச் மாதத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு (டி.எஸ்.பி.) பதவி வழங்கியது. 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவருக்கு இந்த பதவியை வழங்கி பஞ்சாப் மாநில முதல்–மந்திரி அமரிந்தர்சிங் உத்தரவிட்டார். 

துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்ற ஹர்மன்பிரீத் கவுர், மீரட் நகரில் உள்ள சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்ததாக சான்றிதழ் அளித்து இருந்தார்.

அந்த படிப்பு சான்றிதழின் உண்மை தன்மை குறித்து முறைப்படி விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் ஹர்மன்பிரீத் கவுர் அளித்த படிப்பு சான்றிதழ் போலியானது என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் முதல்–மந்திரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

 பட்டப்படிப்பு முடிக்காதவர் துணை போலீஸ் சூப்பிரண்டு பதவி வகிக்க முடியாது என்பதால் ஹர்மன்பிரீத் கவுரின் டி.எஸ்.பி. பதவியை பறித்து விட்டு, அவருடைய பிளஸ்–2 கல்வி தகுதிக்கு ஏற்ப போலீஸ் கான்ஸ்டபிள் பதவி வழங்க பஞ்சாப் மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருவதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்க பஞ்சாப் அரசு விரும்பவில்லை என்று தெரிகிறது.

இந்த சர்ச்சை குறித்து ஹர்மன்பிரீத் கவுரின், மேலாளர் கருத்து தெரிவிக்கையில், ‘பதவி பறிப்பு குறித்து பஞ்சாப் போலீசிடம் இருந்து ஹர்மன்பிரீத் கவுருக்கு அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை. இதே படிப்பு சான்றிதழ் தான் ரெயில்வேயில் வேலைக்கு சேரும் போது சமர்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்படி இருக்கையில் அந்த சான்றிதழ் எப்படி போலியாக முடியும்?” இவ்வாறு அவர் தெரிவித்தார்.