மாநில செய்திகள்

வால்பாறையில் கனமழை; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர் ஹரிஹரன் அறிவிப்பு + "||" + Heavy rainfall; Holiday for schools today:  Collector Hariharan's announcement

வால்பாறையில் கனமழை; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர் ஹரிஹரன் அறிவிப்பு

வால்பாறையில் கனமழை; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: 
 ஆட்சியர் ஹரிஹரன் அறிவிப்பு
வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோவை,

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் கடந்த 2 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தொடர்ந்து வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது.  இதனை அடுத்து வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டு உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயல் எதிரொலி: புதுக்கோட்டை மாவட்டத்தில் மீட்பு பணிக்கு 2 ஆயிரம் பேர் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
கஜா புயல் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மீட்பு பணியில் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கஜா புயல்; 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. ‘கஜா’ புயல்: கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு
‘கஜா’ புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்பு செல்வன் அறிவித்துள்ளார்.
4. கஜா புயல்; புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
புதுச்சேரி, காரைக்காலில் கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. கஜா புயலால் கன மழைக்கு வாய்ப்பு: கழிவுநீர் வாய்க்கால்களில் குப்பைகளை கொட்டக்கூடாது - நகராட்சி ஆணையர்கள் வலியுறுத்தல்
கஜா புயலால் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே மழைநீர் தடையில்லாமல் செல்ல கழிவுநீர் வாய்க்கால்களில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று நகராட்சி ஆணையர்கள் வலியுறுத்தி உள்ளனர்.