தேசிய செய்திகள்

மணிப்பூரில் நில சரிவு; 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி + "||" + Nine, including eight children, killed due to landslide in Manipur

மணிப்பூரில் நில சரிவு; 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

மணிப்பூரில் நில சரிவு; 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
மணிப்பூரில் ஏற்பட்ட மிக பெரிய நில சரிவில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

இம்பால்,

மணிப்பூரின் இம்பால் நகரில் நியூ சேலம் பகுதியில் தமெங்லாங் என்ற இடத்தில் இன்று திடீரென நில சரிவு ஏற்பட்டு உள்ளது.  இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் புகுந்துள்ளது.  இதில் மலை பிரதேச பகுதிகளில் இருந்த பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன.

இவற்றில் பெற்றோர் ஒருவரது 5 குழந்தைகளும் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.  இதேபோன்று மற்றொரு பகுதியில் ஏற்பட்ட நில சரிவில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.  நீய்கைலுவாங் பகுதியில் ஏற்பட்ட நில சரிவில் பெண் மற்றும் அவரது மகன் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து மாவட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் இயல்பு நிலை திரும்புவதற்கு உதவிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தீயணைப்பு படையினரும் மக்களுக்கு உதவ பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.  உடல்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

நில சரிவால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிற சாலைகளுக்கான இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.  இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் திடீர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் திடீரென உயிரிழந்துள்ளன.
2. காஷ்மீரில் நில சரிவு: 9 வயது சிறுமி பலி, 3 பேர் காயம்; 200 பேர் மீட்பு
காஷ்மீரில் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி 9 வயது சிறுமி பலியானாள். அவரது குடும்பத்தின் 3 பேர் காயமடைந்தனர்.
3. பீகார் அரசு தத்தெடுப்பு மையங்களில் பசி, தண்டனை போன்ற கொடுமைகளுடன் வாழும் குழந்தைகள்
பீகாரில் அரசு தத்தெடுப்பு மையங்களில் உள்ள சில குழந்தைகள் பசி, தண்டனை மற்றும் தகாத சொற்களால் திட்டுதல் ஆகிய கொடுமைக்கு ஆளாகின்றனர் என ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
4. ஏமனில் சவூதி கூட்டணி படை வான்வழி தாக்குதலில் 26 குழந்தைகள் பலி
ஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினரின் வான்வழி தாக்குதலில் 26 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
5. கேரளாவில் மழை வெள்ளம்: பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 100 டன் சத்துணவு பாக்கெட்டுகள்
கேரளாவில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 100 டன் சத்துணவு பாக்கெட்டுகளை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியது.