உலக செய்திகள்

9 நாட்கள் சிறுவர்களை குகையில், பத்திரமாக பார்த்துக் கொண்ட பயிற்சியாளர் குறித்த பரபரப்பு தகவல்கள் + "||" + 9 days in the cave Being safe Trainer information about trainer

9 நாட்கள் சிறுவர்களை குகையில், பத்திரமாக பார்த்துக் கொண்ட பயிற்சியாளர் குறித்த பரபரப்பு தகவல்கள்

9 நாட்கள் சிறுவர்களை குகையில், பத்திரமாக பார்த்துக்  கொண்ட பயிற்சியாளர் குறித்த பரபரப்பு  தகவல்கள்
9 நாட்கள் சிறுவர்களை குகையில், பத்திரமாக பார்த்துக் கொண்ட பயிற்சியாளர் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. #ThaiCaveRescue #Thamluangcave #Thailandcave
‘தாய்லாந்தில் சியாங் ராய் பகுதியில் உள்ள தி தம் லுஅங் கோகி பகுதியில் சுற்றுலா சென்ற கால்பந்தாட்ட சிறுவர்கள் 12 பேர் தங்களது பயிற்சியாளர் உடன் இணைந்து, அங்கு ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக குகையிலேயே சிக்கி கொண்டனர்.பின்னர் 9 நாட்களுக்கு பிறகு இங்கிலாந்தை  சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்களால், சிறுவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக குகை பகுதியில் சகதி நிறைந்திருந்தால், சிறுவர்களை வெளியில் கொண்டு வருவதில் சிரமம் நீடித்து வந்தது.

அதேசமயம் தாய்லாந்து கடற்படை வீரர்களுக்கு உதவுவதற்காக, பல நாடுகளை சேர்ந்த ஏராளமான ஆழ்கடல் நீச்சல் வீரர்களும் முன்வந்தனர் இதனையடுத்து கடும் சவால்களையும் தாண்டி, தேர்ச்சி பெற்ற நீச்சல் வீரர்களின் உதவியுடன் 3 கட்டமாக 13 பேரும் நேற்று மீட்கப்பட்டனர்.

உலகம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் வேளையில், குகையில் இருந்த சிறுவர்கள் எவ்வாறு பயமின்றி 9 நாட்களாக இருந்தனர் என்பது பற்றி, இந்தியாவின் தாய்லாந்து தூதர் அபிரட் சுகோந்தபிரோம் விளக்க மளித்துள்ளார். 

இது குறித்து கூறுகையில், சிறுவர்களுடன் குகையில் சிக்கிய கால்பந்து பயிற்சியாளர் இதற்கு முன்பு ஒரு பவுத்த மத துறவியாக இருந்தவர். எப்படி சிக்கலான சூழ்நிலையை சாதுர்யமாக கையாள்வது என்பதில் தேர்ச்சி பெற்றிருந்த அவர், சிறுவர்களை தியானம் செய்யுமாறு பயிற்சியளித்துள்ளார். இதனால் தான் சிறுவர்கள் எந்தவித பயமுமின்றி குகையில் இருந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து குகையில் சிக்கி தவித்த சிறுவர்களை மீட்டதில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த  ரிச்சார்ட் ஹாரிஸ் சிறப்பான பங்காற்றியதாக கூறப்படுகிறது. தாய்லாந்தை சேர்ந்த மீட்பு படையினருடன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிச்சார்ட் ஹாரிஸ் தலைமையிலான குழு சேர்ந்து பணியாற்றியது. ரிச்சார்ட் ஹாரிஸ் ஆலோசனையின் பேரிலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு 13 பேரும் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மீட்பு பணியை சிறப்பாக முடித்து தாயகம் திரும்பும் ரிச்சார்ட் ஹாரிஸ் தலைமையிலான குழுவினர் சிறப்பாக வரவேற்கபடுவார்கள் எனவும், அவர்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கும் எனவும் ஆஸ்ரேலிய நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜூலி பிஷப் கூறியுள்ளார்.

தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்களை மீட்க இந்தியாவும் தொழில்நுட்ப ரீதியான உதவிகளை மேற்கொண்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. சிறுவர்கள் இருந்த குகையில் மழையால் நீர்மட்டம் உயர்ந்து அதை உடனடியாக வெளியேற்றுவதற்கான அவசியம் ஏற்பட்டது.

அதற்கான தொழில்நுட்ப உதவிக்காக கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் நிறுவனத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தாய்லாந்து அரசுக்குப் பரிந்துரைத்தது.

இதையடுத்து புனேவைத் தலைமையிடமாகக் கொண்ட அந்த நிறுவனம், இந்தியா, தாய்லாந்து மற்றும் இங்கிலாந்தில் இருந்து தமது தொழில்நுட்ப நிபுணர்களை கடந்த 5ஆம் தேதி குகை உள்ள பகுதிக்கு அனுப்பியது. அவர்கள் அங்கு சென்று குகையில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தங்கள் நிறுவனத்தின்  பொருட்களை இயக்குவது எப்படி? தனித்துவம் என்ன? என்பது குறித்த விவரங்களைத் தெரிவித்து கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் நிபுணர்கள் இரவு பகலாக மீட்பு பணிக்கு உதவியது தற்போது தெரியவந்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...