உலக செய்திகள்

உலகின் மிகப்பெரிய குடும்பம் கின்னஸ் உலக சாதனைக்காக விண்ணப்பித்த முதியவர் + "||" + The largest family in the world Guinness World Records Old man who applied

உலகின் மிகப்பெரிய குடும்பம் கின்னஸ் உலக சாதனைக்காக விண்ணப்பித்த முதியவர்

உலகின் மிகப்பெரிய குடும்பம்  கின்னஸ் உலக சாதனைக்காக விண்ணப்பித்த முதியவர்
முதியவர் ஒருவர் உலகின் மிகப்பெரிய குடும்பம் எனக் கூறி கின்னஸ் உலக சாதனைக்காக விண்ணப்பித்துள்ளார். #GuinnessWorldRecord
உக்ரைன் நாட்டில் குடியிருந்து வருபவர் 87 வயதான பவெல் செமினியூக். தமது இளமை காலம் தொட்டே மிகப்பெரிய குடும்பம் குறித்து கனவு கண்டு வந்த இவருக்கு திருமணம் முடிந்து 13 பிள்ளைகளை பெற்றெடுத்தார் இவரது மனைவி. பல திருமணங்கள் மற்றும் பிறப்புகள் கண்ட இவரது குடும்பத்தில் தற்போது 346 உறுப்பினர்கள் உள்ளனர். அது மட்டுமின்றி மிகவும் வயது குறைவான நபருக்கு வயது 2 வாரங்கள் தான்.



டிசா ஒபலஸ்ட் மாகாணத்தில் ஒரு குட்டி கிராமத்தில் குடியிருக்கும் செமினியூக் தமக்கு பிறந்த 13 பிள்ளைகளால் தாம் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர் என எப்போதும் கூறி வந்துள்ளார். ஆனால் தற்போது அவருக்கு 127 பேரப்பிள்ளைகள் உள்ளனர். அது மட்டுமின்றி 203 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர். மேலும் அவரது கொள்ளுப் பேரப்பிள்ளைகளுக்கும் தற்போது 3 பிள்ளைகள் உள்ளனர். முன்னாள் கட்டுமானத் தொழிலாளியான செமினியூக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் தமது பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகளின் பெயர்களை நினைவில் வைத்திருப்பது மட்டுமே கடினம் என கூறியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் குடும்பத்தில் ஒரு திருமணம் நடைபெறும்போது எஞ்சிய குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கான குடியிருப்பை கட்டுவதில் மும்முரமாகிவிடுவார்கள் என கூறும் செமினியூக், தமது பேரப்பிள்ளைகளும் கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுவருவது தமக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.



தற்போது இந்திய நபர் ஒருவர் 192 குடும்ப உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய குடும்பம் என்ற கின்னஸ் சாதனையை தக்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து உணவகத்தில் மீண்டும் நச்சு பொருள் தாக்குதல்
இங்கிலாந்தில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது நச்சுப் பொருள் தாக்குதல் நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. வியட்நாமில் நடைபெற்ற இசைத்திருவிழாவில் சோகம் 7 பேர் பலி
வியட்நாமில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் மர்மமான போதைப்பொருளை எடுத்துக்கொண்டதால், 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3. 73 ஆயிரம் ஆண்டுகள் முந்திய ஓவியம் கண்டுபிடிப்பு
73 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியம் பொறிக்கப்பட்ட சிறு பாறைத் துண்டொன்றை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர்.
4. 83 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை - கொலை சிறுவன் கைது
அமெரிக்காவில் 83 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளான்.
5. 12 பணிப்பெண்களுடன் மகளை படிக்க அனுப்பும் பணக்கார இந்திய தந்தை
ஆண்டுக்கு தலா ரூ 28 லட்சம் சம்பளத்தில் 12 பணிப்பெண்களை நியமித்து மகளை படிக்க அனுப்புகிறார் பணக்கார இந்திய தந்தை ஒருவர்.