உலக செய்திகள்

40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்ற இலங்கை அரசு முடிவு + "||" + Lanka govt approves capital punishment for drug offences

40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்ற இலங்கை அரசு முடிவு

40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்  மரண தண்டனையை நிறைவேற்ற  இலங்கை அரசு முடிவு
40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. #CapitalPunishment
கொழும்பு,

இலங்கையில், கடந்த 1976 ஆம் ஆண்டுக்கு பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், ஆயுட்காலம் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் கொடூர குற்றங்கள் புரிந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 

போதைப்பொருள் தொடர்பான கொடூர குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 19 பேரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொடர்ச்சியாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 19 பேருக்கு மரணதண்டணையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய 19 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளதால், விரைவில் ஜனாதிபதி கையெழுத்திட்ட பின்னர் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அந்நாட்டு அமைச்சரவை செய்தி தொடர்பாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 



தொடர்புடைய செய்திகள்

1. ஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி
ஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது. இந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா ஓட்டு போட்டது.
2. வங்காளதேசத்தில் போர் குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பேருக்கு மரண தண்டனை விதிப்பு
வங்காளதேசத்தில் போர் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆளும் அவாமி லீக் கட்சியின் முன்னாள் தலைவர் உள்பட 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
3. எகிப்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தொடர் தாக்குதல்; 17 பேருக்கு மரண தண்டனை
எகிப்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் தொடர்புடைய 17 பேருக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
4. எகிப்தில் 2013-ல் நடைபெற்ற போராட்டத்தில் தொடர்புடைய 75 பேருக்கு மரண தண்டனை
எகிப்தில் கடந்த 2013-ல் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தொடர்புடைய 75 பேருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.