தேசிய செய்திகள்

செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவரால் நேரிட்ட பெரும் விபத்து! + "||" + Take a look how cell phone driving leads to a major mishap in Hyderabad

செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவரால் நேரிட்ட பெரும் விபத்து!

செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவரால் நேரிட்ட பெரும் விபத்து!
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவரால் பெரும் விபத்து நேரிட்டுள்ளது. #TrafficRuleViolations #Hyderabad
ஐதராபாத்,

கடந்த 2017-ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 60 ஆயிரம் விபத்துகள் நேரிட்டதாகவும், அவற்றில் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் பலியானதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு, நீதிமன்றம் உத்தரவிட்டாலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் அதனை பின்பற்றாத நிலை இன்னும் தொடர்கிறது. சாலை விபத்துக்களில் பெரும்பாலான விபத்துக்கள் விதிகளை மீறுவதாலே ஏற்படுகிறது, உயிர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வாகன ஓட்டிகள் புறக்கணிக்கிறார்கள். இப்போது விதிமீறல் காரணமாக நேரிடும் கொடூரமான விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில் இளைஞர், சாலையில் வாகனம் செல்வதை கவனிக்காமல் அசாத்தியமாக செயல்படுவது பதிவாகியுள்ளது. சாலையின் ஓரத்தில் மோட்டார் சைக்கிளை செல்போனில் பேசியவாரே ஷாட் செய்யும் இளைஞர், சாலையில் வாகனங்கள் செல்வதை பார்க்காமல், அதுபற்றி துளிகூட சிந்திக்காமல் தவறான பாதையில் கடக்கிறார். 

அப்போது ஆட்டோ மோதுவதில் இருந்து தப்பித்தாலும், எதிர்திசையில் இருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் காயம் அடைந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார், அவருக்கு மூளைச்சாவு நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் செல்போன் பேசிக்கொண்டு மோட்டார் சைக்கிளை இயக்கியது, எதிர்வரும் வாகனங்களை கவனிக்காது, தவறான பாதையில் மோட்டார் சைக்கிளை திருப்பியது மற்றும் தலைகவசம் அணியாதது என விதிகளை மீறி அவருடைய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார். எத்தனை விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டாலும், அதனை பின்பற்றாது இதுபோன்ற விபத்துக்கள் நேரிடுவது மிகவும் வேதனைக்குரியது.