தேசிய செய்திகள்

பாலோவர்களில் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் 3-வது இடம் பேஸ்புக்-இன்ஸ்டாகிராமில் முதல் இடம் + "||" + PM Narendra Modi is world No. 3 on Twitter, No.1 on Facebook, Instagram

பாலோவர்களில் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் 3-வது இடம் பேஸ்புக்-இன்ஸ்டாகிராமில் முதல் இடம்

பாலோவர்களில் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில்  3-வது இடம் பேஸ்புக்-இன்ஸ்டாகிராமில் முதல் இடம்
சமூக வலைத்தள பாலோவர்களில் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் 3-வது இடமும் பேஸ்புக்-இன்ஸ்டாகிராமில் முதல் இடமும் கிடைத்து உள்ளது. #PMNarendraModi
புதுடெல்லி

டுவிட்டரில் அதிக பாலோவர்களை கொண்ட தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி உலகில் 3-வது இடத்தில் உள்ளார். பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்  சமூக வலைதளங்களில்  முதல் இடத்தில் உள்ளார். பேஸ்புக்கில்  பாலோவர்களில் 50  உலக தலைவர்களில் மோடி முதல் இடத்தில் உள்ளார். பேஸ்புக்கில் அவருக்கு  4.32 கோடி பாலோவர்கள் உள்ளனர்.

தொடர்ந்து  அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்  2.33 கோடி பாலோவர்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.  4-வது இடத்தில்  1.3 கோடி பாலோவர்களுடன்  இந்திய பிரதமரின் அலுவலகம்  (PMO India) உள்ளது. வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் தனிப்பட்ட கணக்கு 20 வது இடத்தில் உள்ளது.

நரேந்திர மோடியைப் பொறுத்தவரை, பேஸ்புக்கில் மிகவும் சக்தி வாய்ந்த  உலகத் தலைவராக உள்ளார். அவருடைய பதிவுகள் ஒவ்வொன்றும் சராசரியாக 99,133  பேர் பார்வையிடுகிறார்கள்.

புகைப்படம் பகிரும்  இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில்  மோடி 1.2  கோடி  ஆதரவாளர்களுடன் உலகின் 50   தலைவர்களில் முதல் இடத்தில் உள்ளார்.  இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விவோடோ 90 லட்சம் பாலோவர்களுடன்  இரண்டாவது இடத்தில் உள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதி 80 லட்சம் பாலோவர்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். தொடர்ந்து போப் பிரான்சிஸ் 50 லட்சம் பலோவர்களுடன்  உள்ளார். வேறு எந்த  தலைவர்களும் இன்ஸ்டாகிராம் பட்டியலில் இல்லை. 

சராசரியாக ஒரு பதவிற்கு 7,22,184 பரஸ்பர தொடர்புகளுடன், மோடி மிகவும் சக்தி வாய்ந்த உலகத் தலைவராக உள்ளார்.

டுவிட்டரில், மோடி 4.34 கோடி பாலோவர்களுடன் உலக அளவில் மூன்றாவது உலக தலைவராக உள்ளார். டுவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் போப் பிரான்சிஸ், 4.7 கோடி  பாலோவர்களுடன்  2-வது  இடத்தில் உள்ளார். டிரம்ப்பின் தனிப்பட்ட கணக்கில்  5.34 கோடி பாலோவர்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

டுவிட்டரில் அதிகப்படியான தொடர்பு கொண்ட தலைவர்களின் பட்டியலில், மோடி போப்பை  முந்துகிறார், ஆனால் டிரம்ப் முதலில் இருக்கிறார். மோடிக்கு 5.2  தொடர்புகள் இருந்தன, டிரம்ப்பில் 56.4 மில்லியன் தொடர்புகள் உள்ளன.

சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு டுவீட் ஒன்றுக்கு சராசரியாக அதிக ரீ டுவிட் செய்து உள்ளார். சவுதி இளவரசர், டுவிட்டரில் வெறும் 60 லட்சம் பலோவர்கள் உள்ளனர்.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவைக் கட்டுப்படுத்தும் இவர் ,  ட்வீட் ஒன்றுக்கு சராசரியாக 1,50,000 டுவிட் செய்து உள்ளார்.  டிரம்ப் சராசரியா 20 ஆயிரம் ரீ டுவிட்களும்  மோடி சராசரியாக 2 ஆயிரம் ரீ டுவிட்டுகளும் செய்து உள்ளனர்.  மிகவும் செல்வாக்குள்ள உலகத் தலைவர்களின் பட்டியலில், மோடி 11 வது இடத்தைப் பிடித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 5 கோடி பேஸ்புக் கணக்குகள் ஹேக்: உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறியும் வழி
சுமார் 5 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறியும் வழியை காணலாம்.
2. சமூக வலைதளத்தில் அமைச்சர் தங்கமணி குறித்து அவதூறு: முன்னாள் பெண் எம்.எல்.ஏ. கைது
அமைச்சர் தங்கமணி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பிய முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்று நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
3. சமூக வலைதளங்கள் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கின்றன : டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு
கூகுள், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாக டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
4. சமூக வலைதளத்தில் சகோதரிக்கு அவதூறு: தட்டிக்கேட்ட கல்லூரி மாணவருக்கு கத்தி வெட்டு - வாலிபர் கைது
சமூக வலைதளத்தில் சகோதரியை அவதூறாக விமர்சித்ததை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவரை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
5. மனைவி தற்கொலை செய்வதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ள கணவன் குடும்பம்
இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து போவதை கணவன் குடும்பத்தினர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.