தேசிய செய்திகள்

புராரி குடும்பத்தினர் 10 பேர் தற்கொலை செய்து கொண்டது பிரேதபரிசோதனையில் உறுதி + "||" + Burari case: Post-mortem report out, 10 members of Chundawat family committed suicide, say doctors

புராரி குடும்பத்தினர் 10 பேர் தற்கொலை செய்து கொண்டது பிரேதபரிசோதனையில் உறுதி

புராரி குடும்பத்தினர் 10 பேர் தற்கொலை செய்து கொண்டது பிரேதபரிசோதனையில் உறுதி
புராரி குடும்பத்தினர் தற்கொலை 10 பேர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது என பிரேதபரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். #Buraricase
புதுடெல்லி

டெல்லியின் புராரி பகுதியில் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டனர் இந்த சம்பவம் தொடர்பாக 200 பேரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக, இறந்தவர்களில் ஒருவரான 33 வயது பிரியங்கா பாட்டியாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையிடம் போலீசார் 3 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தியதாக தகவல் கூறப்படுகிறது.

மேலும், சிசிடிவி காட்சிகளில் இவர்கள் தற்கொலை செய்வதற்காக நாற்காலியை வாங்கி சென்றதும், பாத் பூஜா குறித்த குறிப்புகள் வீட்டில் கிடைத்ததால், இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, பாட்டியா குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ‘முக்தியடையும்’ நோக்கில் தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

மேலும், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பிரியங்காவுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதால்தான் திருமணம் நடைபெற காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. எனவே தோஷம் கழிப்பதற்காக இந்த தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் புராரி  பகுதி குடும்பத்தினர் தற்கொலை தான் செய்து கொண்டுள்ளனர் என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. டெல்லி காவல்துறைக்கு வழங்கப்பட்ட  பிரேத பரிசோதனை அறிக்கையில்  10 பேர் தூக்கிடப்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், உள்ளுறுப்புகளில் அறிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது. 

நாராயணி தேவி மற்றும்  மரணத்திற்குப் பின்னணியில் உள்ள சரியான காரணத்திற்காக மருத்துவர்கள் இன்னும் உறுதியான முடிவுக்கு வரமுடியவில்லை.      

ஆசிரியரின் தேர்வுகள்...