மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் ? நீதிபதிகள் சரமாரி கேள்வி + "||" + Tuticorin Gunfire incident: Where did the collector go without town? Judges questioned the volley

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் ? நீதிபதிகள் சரமாரி கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்:  ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் ? நீதிபதிகள் சரமாரி கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் ?என நீதிபதிகள் சரமாரி கேள்வி கேட்டனர்
மதுரை 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் 100வது நாள் அன்று கலவரம் ஏற்பட்டது. இதில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடைபெற்று வருகிறது. அத்துடன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன

தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவத்தில் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வழக்குளை ஒன்றாக சேர்த்து  ஐகோர்ட் மதுரை கிளையில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எடுத்த நடவடிக்கைகள் என்ன? துப்பாக்கிச்சூட்டில் என்ன வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது? துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் ? என இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சரமாரி கேள்விகளை கேட்டனர்.

 மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை 18ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும், மேலும் 99 நாட்கள் நடந்த போராட்டம் பற்றிய உளவுத்துறை அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.