மாநில செய்திகள்

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை + "||" + Heavy rain in chennai

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
சென்னையின் பல்வேறு இடங்களில், மாலை வேளையில் பரவலாக மழை பெய்தது.
சென்னை, 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  இந்நிலையில், இன்று மாலை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின்  பல இடங்களிலும் நல்ல  மழை பெய்தது. 

குறிப்பாக போரூர், ராமபுரம், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது. கடந்த சில தினங்களாகவே, சென்னையில், மாலை வேளையில்  மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து சென்னை குளிர்ச்சியாக மாறியுள்ளது. 


ஆசிரியரின் தேர்வுகள்...