தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக ஈரான் மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுக்காது: இந்திய முன்னாள் தூதரக அதிகாரி + "||" + Iran won't take aggressive posture against India: Ex-Diplomat

இந்தியாவுக்கு எதிராக ஈரான் மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுக்காது: இந்திய முன்னாள் தூதரக அதிகாரி

இந்தியாவுக்கு எதிராக ஈரான் மூர்க்கத்தனமான  நிலைப்பாட்டை எடுக்காது: இந்திய முன்னாள் தூதரக அதிகாரி
இந்தியாவுக்கு எதிராக ஈரான் மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுக்காது இந்திய முன்னாள் தூதரக அதிகாரி தெரிவித்து உள்ளார். #Iran
ஐதராபாத்,

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்வதை  இந்தியா நிறுத்தினால், இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று ஈரானின் மூத்த தூதரக அதிகாரி தெரிவித்து இருந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக ஈரான் அத்தகைய நடவடிக்கையை எடுக்க வாய்ப்பு இல்லை என்று வளைகுடா நாடுகளுக்கான முன்னாள் இந்திய தூதர் தெரிவித்துள்ளார். 

ஐதாரபாத்தில் பிடிஐ செய்தி நிறுவனம் தொடர்பு கொண்ட போது, இது பற்றி சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகளுக்கான இந்திய முன்னாள் தூதரக அதிகாரி, தல்மிஸ் அகமது கூறியதாவது, “ நான் இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். தூதரக அதிகாரி எடுக்கும் முடிவு இல்லை இவை.  அதிமுக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள், உயர் மட்ட குழுவினரால் மட்டுமே எடுக்கப்படும்

நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகள் அனைத்துமே இருதரப்பு ஆதாயங்களுக்காகவும், செய்துகொள்ளும் ஒப்பந்தங்களும் பரஸ்பர ஆதாயம் கருதியே செய்யப்படுகின்றன. இந்நிலையில், பொறுப்புள்ள ஒரு நாட்டின் தூதர், பொறுப்பற்ற முறையில் இப்படி கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் ஈரான் நடந்து கொள்ளாது” என்றார். 

முன்னதாக, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஈரான் நாட்டு துணை தூதர் மசூத் ரிஸ்வானியன் ராஹாகி, ‘ஈரானை ஒதுக்கிவிட்டு சவுதி, ரஷியா, ஈராக் போன்ற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியா முடிவு செய்தால், இந்தியாவுக்கு அளித்துவரும் முன்னுரிமையை நிறுத்தி விடுவோம்’ என குறிப்பிட்டிருந்தார்.தொடர்புடைய செய்திகள்

1. உர்ஜித் படேல் ராஜினாமா; அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் - ரகுராம் ராஜன்
உர்ஜித் படேல் ராஜினாமா பற்றி அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் என்று முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
2. பா.ஜனதா இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
பா.ஜனதா இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
3. அடிலெய்டு டெஸ்ட் : 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்ப்பு
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்துள்ளது.
4. அடிலெய்டு டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்களுக்கு ஆல் அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
5. கர்தார்பூர் சாலை திட்டம்: இந்தியா-பாகிஸ்தானுக்கு, சீனா பாராட்டு
கர்தார்பூர் சாலை திட்டம் தொடர்பாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு சீனா தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது.