டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்; காலிறுதியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி + "||" + Wimbledon 2018: Roger Federer knocked out after 6-2, 7-6, 5-7, 4-6, 11-13 loss to Kevin Anderson in the quarter-final

விம்பிள்டன் டென்னிஸ்; காலிறுதியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ்; காலிறுதியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் காலிறுதியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். #Wimbledon2018
லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், இத்தாலியைச்சேர்ந்தவரும், 7-வது நிலை வீரருமான கெவின் ஆண்டர்சனும் மோதினர். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 6-2, 7-6, 5-7, 4-6, 11-13 என்ற செட் கணக்கில், கெவின் ஆண்டர்சன் வெற்றி பெற்றார்.  உலகின் 2-ஆம் நிலை வீரரும், ஆண்கள் பிரிவில் 8 முறை சாம்பியன் பட்டம் வென்றவருமான ரோஜர் பெடரர் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.