மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வு மதிப்பெண் விவகாரம்: தமிழக மாணவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அரசு எடுக்கும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி + "||" + The government will take positive action Minister CV Vijayabaskar

‘நீட்’ தேர்வு மதிப்பெண் விவகாரம்: தமிழக மாணவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அரசு எடுக்கும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

‘நீட்’ தேர்வு மதிப்பெண் விவகாரம்: தமிழக மாணவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அரசு எடுக்கும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி
‘நீட்’ தேர்வு மதிப்பெண் தொடர்பான விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சென்னை, 

‘நீட்’ தேர்வு மதிப்பெண் தொடர்பான விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியின் 200–வது ஆண்டு விழா ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆஸ்பத்திரி இயக்குனர் பி.எஸ்.மகேஷ்வரி தலைமை தாங்கினார்.

மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் ஜெயந்தி, டாக்டர் மலர்விழி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பலூன்களை பறக்கவிட்டு, கண் தானம் செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் 200–வது ஆண்டு தொடக்க விழா கல்வெட்டு திறக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கண் விபத்து சிகிச்சை குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில், எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியின் 200–வது ஆண்டு சின்னத்தை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். மருத்துவத்துறையில் சிறப்பாக சேவை ஆற்றிய டாக்டர் எஸ்.நடராஜன் கவுரவிக்கப்பட்டார்.

முன்னதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:–

எழும்பூர் அரசு ஆஸ்பத்திரி 200–வது ஆண்டு விழாவையொட்டி முதல்–அமைச்சர் ஒப்புதலோடு ரூ.50 லட்சத்தில் நினைவு நுழைவாயில் அமைக்கப்படும்.

‘நீட்’ தேர்வு மதிப்பெண் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட்டுள்ளது. அந்த தீர்ப்பின் முழு விவரம் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதை பார்த்த பிறகு அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும். தமிழக மாணவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அரசு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.