உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் ‘திடீர்’ மாற்றம் + "||" + Trump chooses Pakistan ambassador for Under Secretary of State

பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் ‘திடீர்’ மாற்றம்

பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் ‘திடீர்’ மாற்றம்
பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் பதவி வகிப்பவர், டேவிட் ஹேலே. இவரை அந்தப் பதவியில் இருந்து மாற்றிவிட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திடீரென முடிவு எடுத்து உள்ளார்.
வாஷிங்டன், 

பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் பதவி வகிப்பவர், டேவிட் ஹேலே. இவரை அந்தப் பதவியில் இருந்து மாற்றிவிட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திடீரென முடிவு எடுத்து உள்ளார்.

டேவிட் ஹேலேவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையில் கீழ்நிலை செயலாளர் பதவி வழங்க அவர் தீர்மானித்து இருக்கிறார். அமெரிக்காவில் வெளியுறவுத்துறையில், துறைக்கான மந்திரி, செயலாளர் பதவிக்கு அடுத்த மூன்றாவது உயர் பதவி இந்தப் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதவியில் இருந்து வந்த தாமஸ் ஷானோன் கடந்த மாதம் 4-ந் தேதி ஓய்வு பெற்று விட்டதை அடுத்து உருவாகி உள்ள காலி இடத்தை நிரப்புவதற்கு டேவிட் ஹேலே வருகிறார்.

டேவிட் ஹேலே, வெளியுறவுத்துறையில் கீழ்நிலை செயலாளர் பதவி ஏற்பதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேல்சபையான செனட் சபை தனது ஒப்புதலை வழங்க வேண்டும்.

இவர் 2015-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் அமெரிக்க தூதர் பதவி வகித்து வருகிறார். இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்கு இவர் தனது ஆதரவை தெரிவித்து வந்தார். இவர் லெபனான் நாட்டிலும் அமெரிக்க தூதர் பதவி வகித்து இருக்கிறார்.