தேசிய செய்திகள்

அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட இந்திய மாணவரின் உடல் ஐதராபாத் வந்தடைந்தது + "||" + Body of Indian student killed in Kansas arrives in Hyderabad

அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட இந்திய மாணவரின் உடல் ஐதராபாத் வந்தடைந்தது

அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட இந்திய மாணவரின் உடல் ஐதராபாத் வந்தடைந்தது
அமெரிக்காவில் கொள்ளை முயற்சியில் சுட்டு கொல்லப்பட்ட இந்திய மாணவரின் உடல் தெலுங்கானாவுக்கு வந்தடைந்து உள்ளது.

ஐதராபாத்,

அமெரிக்காவில் கன்சாஸ் சிட்டியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் சரத் கோப்பு (வயது 25).  இந்திய மாணவரான இவர் தெலுங்கானாவை சேர்ந்தவர்.

கடந்த வெள்ளி கிழமை விடுதிக்குள் புகுந்த நபரொருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.  இதில் அந்த நபரிடம் இருந்து தப்பியோட முயன்ற கோப்பு துப்பாக்கியால் சுடப்பட்டார்.  இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கோப்பு அங்கு உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர் விடுதிக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முந்தைய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை கன்சாஸ் சிட்டி போலீசார் வெளியிட்டு உள்ளனர்.  சந்தேக நபரை பற்றிய தகவல் அளிப்போருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசும் வழங்கப்படும் என அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், கோப்புவின் உடல் நள்ளிரவில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.  அவரது உடலை கோப்புவின் தந்தை ராம் மோகன் பெற்று கொண்டார்.  கோப்புவின் உடலுக்கு முன்னாள் மத்திய மந்திரியான பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.


தொடர்புடைய செய்திகள்

1. வாலாஜா வாலிபர் வெளிநாட்டில் குத்திக்கொலை - உடலை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மனு
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த வாலாஜாவை சேர்ந்த வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். உடலை மீட்டு தரக்கோரி மனைவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.
2. குன்னம் அருகே குட்டையில் மூழ்கிய கல்லூரி மாணவர் உடல் மீட்பு
குன்னம் அருகே குட்டையில் மூழ்கிய கல்லூரி மாணவர் உடல் மீட்கப்பட்டது.
3. கேரளாவில் பள்ளி கூட கிணற்றில் மிதந்த கன்னியாஸ்திரியின் உடல் மீட்பு
கேரளாவில் பள்ளி கூடம் ஒன்றின் கிணற்றில் இருந்து கன்னியாஸ்திரி ஒருவரின் உடல் மீட்கப்பட்டு உள்ளது.
4. ‘அண்ணியை அடைய ஆசைப்பட்டு அண்ணனை எரித்து கொன்றேன்’ கைதான மளிகை கடைக்காரர் வாக்குமூலம்
ஆத்தூர் அருகே கூலித்தொழிலாளி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியது. அண்ணியை அடைய ஆசைப்பட்டு அண்ணனை எரித்து கொலை செய்ததாக கைதான மளிகை கடைக்காரர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
5. கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது கூட்ட நெரிசல்; 4 பேர் பலி - 22 பேர் படுகாயம்
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.