உலக செய்திகள்

தாய்லாந்து சிறுவர்கள் மீட்பு: எப்படி காப்பாற்றப்பட்டனர் வீடியோ + "||" + Thailand cave rescue: new footage of dramatic mission

தாய்லாந்து சிறுவர்கள் மீட்பு: எப்படி காப்பாற்றப்பட்டனர் வீடியோ

தாய்லாந்து சிறுவர்கள் மீட்பு:  எப்படி காப்பாற்றப்பட்டனர் வீடியோ
தாய்லாந்து சிறுவர்கள் மீட்பு எப்படி காப்பாற்றப்பட்டனர் என்பது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. #ThaiCaveRescue #Thamluangcave #Thailandcave

தாய்லாந்தில் இருக்கும் சியாங்க் மாகாணத்தில் 7 கி.மீட்டர் நீளமான குகையில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக 12 மாணவர்கள் சிக்கியிருந்தனர். தொடர் மழைக்காரணமாக அவர்களைக் காப்பாற்றுவதில் தாமதம் மற்றும் சிக்கல்கள் ஏற்பட்டன.  இதையடுத்து ஒன்பது நாட்களுக்குப் பின்னர், கடந்த 2-ஆம் தேதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அமெரிக்கா, பிரித்தானியா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த நீச்சல் வீரர்கள் தாய்லாந்திற்கு சென்றனர்.

இதைத் தொடர்ந்து 12 வீரர்கள் மற்றும் ஒரு மருத்துவர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலில் செல்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 8-ஆம் தேதி அவர்கள் குகைக்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 4 சிறுவர்களும் மறுநாள் 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். மேலும் நான்கு பேரும் பயிற்சியாளரும்  மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் சிறுவர்கள் எப்படி காப்பற்றப்பட்டனர் என்பது குறித்து வீடியோவும், அதைப் பற்றி புது தகவலும் கிடைத்துள்ளது. அதில், சிறுவர்களின் பதட்டத்தை தணிப்பதற்காக சிறுவர்களுக்கு முதலில் மருத்து கொடுக்கப்பட்டது. இதனால் அவர்கள் துக்க நிலைக்கு சென்றனர்.

அதன் பின் ஸ்ட்ரெட்சரிலும் அவர்கள் தூங்கிய நிலையிலேயே இருந்தனர். மிக அதிகமான இருட்டிற்குள் குறுகலான பாதை வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவர்கள் பயந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்யப்பட்டது எனவும் ஸ்ட்ரெட்சரையும் மூடிய நிலையிலேயே வைத்திருந்தோம்.  இருந்தாலும் அவர்களின் சுவாசம், பல்ஸ் ரேட், உடல்நலம் ஆகியவை வரும் வழியில் அடிக்கடி கண்காணிப்பட்டு வந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிறுவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் ஒரு காலத்திற்குள் அவர்கள் வீடு திரும்பி விடுவார்கள் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.