தேசிய செய்திகள்

பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்த இளைஞர் + "||" + Agra man live streams suicide on Facebook, friends watch in horror

பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்த இளைஞர்

பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பில் தற்கொலை செய்த இளைஞர்
ஐந்து முறை முயற்சித்தும் ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்து தற்கொலை

ஆக்ரா

தனது 17 வயது முதல் ஐந்து முறை முயற்சித்தும் ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்து தற்கொலை செய்து கொண்டார்.  இதனை 2,750 பேர் பார்த்த போதும், போலீசுக்கு தகவல் அளிக்கவில்லை.

உத்தரபிரதேச  மாநிலம், நியூ ஆக்ரா பகுதி சாந்தி நகரை சேர்ந்தவர் முன்னா குமார் (24). பி.எஸ்.சி., பட்டதாரியான இவர் ராணுவத்தில் சேர ஐந்து முறை முயற்சி செய்தார். அனைத்தும் தோல்வியில் முடிந்தது. 

இதனால், விரகதியடைந்த அவர், பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 1:09 நிமிடங்கள் ஒளிபரப்பான அந்த வீடியோவை 2,750 பேர் பார்த்த போதும், இது குறித்து போலீசையோ முன்னா குமாரின் குடும்பத்தினரையோ உஷார்படுத்தவில்லை. தனது தற்கொலை குறித்து வாலிபர், 6 பக்க கடிதம் எழுதிவைத்துள்ளார்.அதில் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. வாட்ஸ்-அப்பில் படத்தை வெளியிட்டதால் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை காதலன் கைது
வாட்ஸ் -அப்பில் படத்தை வெளியிட்டதால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
2. கடன் தொல்லையால் புத்தக கடைக்காரர் தற்கொலை மயங்கிய நிலையில் மனைவி மீட்பு
கடன் தொல்லையால் புத்தக கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மனைவி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
3. சுங்குவார்சத்திரம் அருகே கடன் தொல்லையால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை
சுங்குவார்சத்திரம் அருகே கடன் தொல்லையால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார்.
4. ஈரோட்டில்: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை
ஈரோட்டில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. தக்கலை அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை
தக்கலை அருகே குடும்ப தகராறில் தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.