தேசிய செய்திகள்

பா.ஜனதா வெற்றிப்பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக’ மாறிவிடும் சசிதரூருக்கு காங்கிரஸ் எச்சரிக்கை + "||" + Congress cautions Shashi Tharoor, urges restraint amid row over comment on BJP making India

பா.ஜனதா வெற்றிப்பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக’ மாறிவிடும் சசிதரூருக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

பா.ஜனதா வெற்றிப்பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக’ மாறிவிடும் சசிதரூருக்கு காங்கிரஸ் எச்சரிக்கை
பா.ஜனதா வெற்றிப்பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக’ மாறிவிடும் என்ற கருத்தையடுத்து சசிதரூரை காங்கிரஸ் எச்சரித்துள்ளது. #ShashiTharoor
புதுடெல்லி,

கேரளாவில் நிகழ்ச்சியொன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், 2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா இப்போது உள்ள பலத்துடன் வெற்றியை பெற்றால், நம்முடைய ஜனநாயகம் பெரும் அழிவை எதிர்கொள்ளும். இந்தியாவின் அரசியலமைப்பை கிழித்து எரியும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும். சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்காத ஒரு பாகிஸ்தான் உருவாவதற்கு வழி வகுக்கும். இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு இந்திய நாடு இந்து பாகிஸ்தானாக மாறிவிடும். 

மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், மெளலானா ஆசாத் போன்ற இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள் எதற்காக போராடினார்களோ? அது இல்லாமல் போய் விடும் என்றார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜனதா, காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் தன்னுடைய கருத்தை நியாயப்படுத்தும் சசிதரூர், பா.ஜனதா உண்மையிலே இந்து ராஷ்டிரா என்ற கொள்கை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் அதனை ஆவணப்படுத்தி தரவேண்டும், மதசார்பற்ற குடியரசு என்பதால் இந்து ராஷ்டிரா என்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என தெரிவிக்க வேண்டும், இதனால் இப்போது ஏற்பட்டுள்ள விவாதம் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி, சசிதரூரை எச்சரித்துள்ளதாகவும், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் விவகாரம்: சர்வதேச சதி எங்கு உள்ளது? பா.ஜனதாவிற்கு காங்கிரஸ் கேள்வி
ரபேல் விவகாரத்தில் சர்வதேச சதி எங்கு உள்ளது? என்று பா.ஜனதாவிற்கு காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது. #Rafaledeal #Congress #BJP
2. காங்கிரஸ் அதிகாரத்தை இழந்ததும் தன்னுடைய நிலையையும் இழந்து விட்டது - பிரதமர் மோடி தாக்கு
பா.ஜனதாவிற்கு எதிராக காங்கிரஸ் அவதூறு பரப்பினாலும் நாங்கள் வெற்றிப்பெறுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
3. கர்நாடக மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
கர்நாடக மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்தலில் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து பா.ஜனதா விலகியது.
4. விஜயமங்கலத்தில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்; கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு
விஜயமங்கலத்தில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு கொடுத்தனர்.
5. ரபேல் விவகாரத்தில் காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் - நிர்மலா சீதாராமன்
ரபேல் விவகாரத்தில் காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.