தேசிய செய்திகள்

டெல்லி ‘சூப்பர் மேன்’ என கூறும் ஆளுநர் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? -சுப்ரீம் கோர்ட்டு + "||" + Supreme Court hits out at superman Delhi LG says he does nothing

டெல்லி ‘சூப்பர் மேன்’ என கூறும் ஆளுநர் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? -சுப்ரீம் கோர்ட்டு

டெல்லி ‘சூப்பர் மேன்’ என கூறும் ஆளுநர் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? -சுப்ரீம் கோர்ட்டு
டெல்லியில் திடக்கழிவு மேலாண்மை விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
புதுடெல்லி,

டெல்லி அரசில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜூலை 10-ம் தேதி விசாரணை நடைபெற்ற போது, டெல்லியில் குப்பையில் மூழ்கி வருகிறது, மும்பை நீரில் மூழ்கி வருகிறது. ஆனால் அரசு எதுவும் செய்வது கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு கடிந்துக்கொண்டது.  திடக்கழிவு மேலாண்மையில் மாநிலங்களின் கொள்கையை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்யாத 10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு அபராதம் விதித்தது.

இன்று விசாரணை நடைபெற்றபோது, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

மாநகராட்சி அதிகாரங்களுக்கு உரிமை கொண்டாடும் துணைநிலை ஆளுநர், பணிகளை செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பியது.
 
உங்களுக்குதான் அதிகாரம் உள்ளது என்கிறீர்கள், நீங்கள்தான் சூப்பர் மேன் என்கிறீர்கள், ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று துணைநிலை ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. துணைநிலை ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் குப்பைகளை அகற்றுவது மாநகராட்சியின் பணியாகும், அதனை கண்காணிப்பதுதான் என்னுடைய பணியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, குப்பையை அகற்றுவது முதல்-மந்திரியா அல்லது துணைநிலை ஆளுநரா என மத்திய அரசு மற்றும் டெல்லி அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மேகதாது விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
மேகதாது விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
2. டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி: விவசாயிகள் போராட்டத்தில் ராகுல் காந்தி ஆவேச பேச்சு - மத்திய அரசு மீது கடும் தாக்கு
டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக தாக்கினார்.
3. டெல்லியில் புதிய வருவாய்த்துறை செயலாளர் பொறுப்பேற்பு
டெல்லியில் புதிய வருவாய்த்துறை செயலாளர் பொறுப்பேற்றுள்ளார்.
4. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி இன்று விவசாயிகள் பேரணி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் இன்று பேரணியாக செல்கின்றனர்.
5. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் கைதிகள் விசாரணையை துரிதப்படுத்தாமல் நீதித்துறையை குறைசொல்வதா?
கைதிகள் மீதான விசாரணையை துரிதப்படுத்தாமல், நீதித்துறையை குறைசொல்வதா? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.