தேசிய செய்திகள்

பீகாரில் நிதிஷ் குமாருடன் கூட்டணி தொடரும் - பா.ஜனதா தலைவர் அமித் ஷா + "||" + Our alliance with Nitish Kumar will continue in Bihar BJP President Amit Shah

பீகாரில் நிதிஷ் குமாருடன் கூட்டணி தொடரும் - பா.ஜனதா தலைவர் அமித் ஷா

பீகாரில் நிதிஷ் குமாருடன் கூட்டணி தொடரும் - பா.ஜனதா தலைவர் அமித் ஷா
பீகாரில் நிதிஷ் குமாருடன் எங்கள் கூட்டணி தொடரும் என பா.ஜனதா தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். #AmitShah

பாட்னா,


2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராகி வருகிறது. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளது. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியது. இதற்கிடையே டெல்லியில் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பா.ஜனதாவுடன் தான் கூட்டணி என தெரிவிக்கப்பட்டது. மேலும் 17 தொகுதிகளில் போட்டியெனவும் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அமித்ஷாவிடம், நிதிஷ் குமார் பேசுவார் என தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பீகார் மாநிலம் சென்றுள்ளார். பாட்னாவில் இன்று காலை மாநில முதல்வர் நிதிஷ் குமாரை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்து பேசினார். விருந்தினர் மாளிகையில், நடைபெற்ற இந்த சந்திப்பின் போது அமித்ஷாவுக்கு காலை உணவு விருந்தும் அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, அமித்ஷாவுடன் பீகார் பாஜக தலைவர்களும் உடன் இருந்தனர். 2019  பாராளுமன்ற தேர்தல் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் பீகாரில் நிதிஷ் குமாருடன் எங்கள் கூட்டணி தொடரும் என பா.ஜனதா தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகைகள்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் சபாநாயகர் வைத்திலிங்கம் பேட்டி
பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார்.
2. “மோடிக்கு எதிராக காங்கிரஸ் சர்வதேச கூட்டணி அமைக்கிறது?” அமித்ஷாவின் சந்தேகத்திற்கு காரணம் என்ன?
“மோடிக்கு எதிராக காங்கிரஸ் சர்வதேச கூட்டணியை அமைக்கிறது?” என பா.ஜனதா தலைவர் அமித்ஷா கேள்வியை எழுப்பியுள்ளார்.
3. எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்
மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டை கண்டித்து எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
4. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பிற கட்சியினரை விமர்சனம் செய்ய வைக்கிறது -தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பிற கட்சியினரை விமர்சனம் செய்ய வைக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். #TamilisaiSoundararajan
5. ரபேல் விவகாரம்: விசாரணை நடத்தக்கோரி சிஏஜியிடம் முறையிட காங்கிரஸ் முடிவு
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக்கோரி சிஏஜியிடம் காங்கிரஸ் இன்று மனு அளிக்க உள்ளது.