தேசிய செய்திகள்

‘இந்து பாகிஸ்தான்’ என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என சசிதரூர் சொல்வது ஏன்? + "||" + Why Shashi Tharoor won t apologise to BJP for warning of a Hindu Pakistan

‘இந்து பாகிஸ்தான்’ என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என சசிதரூர் சொல்வது ஏன்?

‘இந்து பாகிஸ்தான்’ என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என சசிதரூர் சொல்வது ஏன்?
‘இந்து பாகிஸ்தான்’ என்ற தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியுள்ளார். #ShashiTharoor

புதுடெல்லி,

 2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா இப்போது உள்ள பலத்துடன் வெற்றியை பெற்றால், நம்முடைய ஜனநாயகம் பெரும் அழிவை எதிர்கொள்ளும். இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக’ மாறிவிடும் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியது சர்ச்சையாகியுள்ளது. சசிதரூர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜனதா, காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே சசிதரூர் தன்னுடைய கருத்தில் ஸ்திரமாக உள்ளார். ‘இந்து பாகிஸ்தான்’ என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறும் சசிதரூர் இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். 

பா.ஜனதாவின் பார்வைக்கு நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அவசியத்தை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்கனவே பேசியதைதான் மறுபடியும் கூறியுள்ளேன். அவர்களுக்கு இந்து ராஷ்டிராவை உருவாக்க  வேண்டும் என்ற ஐடியா இனி கிடையாது என்றால் அதனை ஒப்புக்கொள்ளட்டும். இப்போது அவர்கள் கூறியதனை நான் நினைவுப்படுத்தியதற்கு நான் எப்படி மன்னிப்பு கேட்க முடியும்? என்று பதில் கேள்வியை எழுப்பியுள்ளார் சசிதரூர்.


தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் விவகாரம்: சர்வதேச சதி எங்கு உள்ளது? பா.ஜனதாவிற்கு காங்கிரஸ் கேள்வி
ரபேல் விவகாரத்தில் சர்வதேச சதி எங்கு உள்ளது? என்று பா.ஜனதாவிற்கு காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது. #Rafaledeal #Congress #BJP
2. காங்கிரஸ் அதிகாரத்தை இழந்ததும் தன்னுடைய நிலையையும் இழந்து விட்டது - பிரதமர் மோடி தாக்கு
பா.ஜனதாவிற்கு எதிராக காங்கிரஸ் அவதூறு பரப்பினாலும் நாங்கள் வெற்றிப்பெறுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
3. கர்நாடக மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
கர்நாடக மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்தலில் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து பா.ஜனதா விலகியது.
4. ரபேல் விவகாரத்தில் காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் - நிர்மலா சீதாராமன்
ரபேல் விவகாரத்தில் காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
5. “ஜெட்லியின் பாஸ் இதையெல்லாம் செய்யமாட்டார்,” ராகுல் காந்தி காட்டம்
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.