தேசிய செய்திகள்

சசிதரூருக்கு மன நிலை பாதிப்பு அவருக்கு மருத்துவ உதவி தேவை -சுப்பிரமணிய சுவாமி தாக்கு + "||" + 'He needs medical help,' Subramanian Swamy attacks Shashi Tharoor for 'Hindu Pakistan' remark

சசிதரூருக்கு மன நிலை பாதிப்பு அவருக்கு மருத்துவ உதவி தேவை -சுப்பிரமணிய சுவாமி தாக்கு

சசிதரூருக்கு மன நிலை பாதிப்பு அவருக்கு மருத்துவ உதவி தேவை -சுப்பிரமணிய சுவாமி தாக்கு
சசிதரூர் மனநிலையை இழந்துவிட்டார். அவரை மோடி மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

புதுடெல்லி

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான  சசிதரூர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்திய நாடு, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்று கூறியிருந்தார்.

இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி சசிதரூரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய சுப்பிரமணியசாமி, சசிதரூர் எதையோ அளவுக்கு அதிகமாக உட்கொண்டு விட்டார்போல.. அவரது பேச்சு மற்றும் கருத்துக்கள் ஏமாற்றத்தின் வெளிப்பாடு என்று கூறினார்.

அவர் கூறிய, இந்து பாகிஸ்தான் என்றால் என்ன? அதற்கு என்ன அர்த்தம்? அவர் பாகிஸ்தானுக்கு எதிரானவரா? அல்லது அவர் பாகிஸ்தானை சமாதானப்படுத்த முயல்கிறாரா என்று கேள்வி எழுப்பிய சாமி இந்திய பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்க பாகிஸ்தானிடம் உதவி கோருகிறார் சசிதருர் என்றார்.

சசிதருக்கு பாகிஸ்தானிய பெண் தோழிகள் உள்ளனர் என்பது தெரியும் என்ற சாமி, அவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ் அமைப்பின் உளவாளிகள் என்றும் குற்றம் சாட்டினார்.

சசிதருரின் இந்த பேச்சு குறித்த விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை என்பதை காங்கிஸ் தலைமை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வற்புறுத்திய சுப்பிரமணியன்சாமி, சசி தரூர் மீது பிரதமர் மோடி இரக்கம் காட்ட வேண்டும் என்றும், அவருக்கு எதுவும் மருத்துவ உதவி தேவையா என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.