உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதின் எதிரி இல்லை; போட்டியாளர்தான்: டொனால்டு டிரம்ப் விளக்கம் + "||" + Putin is a 'competitor', not an 'enemy', says US Prez Donald Trump

ரஷ்ய அதிபர் புதின் எதிரி இல்லை; போட்டியாளர்தான்: டொனால்டு டிரம்ப் விளக்கம்

ரஷ்ய அதிபர் புதின் எதிரி இல்லை; போட்டியாளர்தான்: டொனால்டு டிரம்ப் விளக்கம்
ரஷ்ய அதிபர் புதின் தனக்கு எதிரி இல்லை எனவும் போட்டியாளர்தான் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். #DonaldTrump
வாஷிங்டன், 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அடுத்த வாரம் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார். உலகம் முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- 

“ ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க இருப்பது, எனது ஐரோப்பிய பயணத்தில் மிகவும் எளிதான ஒன்றாக இருக்கும். புதின் எனது போட்டியாளர்தான், எதிரி இல்லை. ஒருநாள் புதின் எனது நண்பராக கூட ஆகலாம் என்ற நம்பிக்கை உள்ளது. புதினை, அவ்வளவாக நான் அறிந்து வைத்திருக்கவில்லை. 

புதினுடனான சந்திப்பின் போது, ஆயுத கட்டுப்பாட்டு விவகாரம், ஐ.என்.எப் ஒப்பந்தத்தை ரஷ்யா மீறுவது, புதிய ஒப்பந்தத்தை நீட்டிப்பது. உக்ரைன் விவகாரம், சிரியா விவகாரத்தில் தீர்வு காண்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்போம்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவிடம் போர் விமானங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்பு
ரஷ்யாவிடம் போர் விமானங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.
2. குழந்தை பெற்று கொள்ள மறுத்த 27 வயது மனைவியை விவாகரத்து செய்யும் 87 வயது நடிகர்
ரஷ்யாவில் 87 வயதுடைய நடிகர் 27 வயது மனைவி குழந்தை பெற்று கொள்ள மறுத்ததால், அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. உலகைச்சுற்றி...
அமெரிக்காவில் வாஷிங்டன் வீதிகள் வழியாக ராணுவ அணிவகுப்பு நடத்த ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.
4. அமெரிக்காவின் பொருளாதார தடை ஏற்றுக்கொள்ள முடியாதது: ரஷ்யா கருத்து
அமெரிக்காவின் பொருளாதார தடை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. #Russia
5. 22ந்தேதி முதல் ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை
ரசாயன தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கு இங்கிலாந்து வரவேற்பு தெரிவித்துள்ளது.