தேசிய செய்திகள்

ஐகோர்ட்டு உத்தரவையடுத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு + "||" + NEET UG counselling 2018 2nd allotment result not releasing today

ஐகோர்ட்டு உத்தரவையடுத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு

ஐகோர்ட்டு உத்தரவையடுத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு
அகில இந்திய அளவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. #NEET #CBSE

புதுடெல்லி,


‘நீட்’ தேர்வு தமிழ் கேள்வித்தாளில் ஏற்பட்ட குளறுபடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தலா 196 மதிப்பெண் வழங்கவேண்டும் என்ற திருப்பு முனை தீர்ப்பினை மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கி உள்ளது. 

இதனையடுத்து அகில இந்திய அளவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நீட் தேர்வு வினாத்தாள் விவகாரத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 2 வாரத்தில் மருத்துவ படிப்புக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில் மறு உத்தரவு வரும் வரையில் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

மாணவர்கள் கூடுதல் தகவல்களை https://mcc.nic.in/ இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். 

மதுரை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ சுப்ரீம் கோர்ட்டில் முறையிடலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.