தேசிய செய்திகள்

பிரதமர் மோடி ”காகிதப்புலி”: காங்கிரஸ் கடும் விமர்சனம் + "||" + Cong slams govt over decline in oil imports from Iran, says PM a 'paper tiger'

பிரதமர் மோடி ”காகிதப்புலி”: காங்கிரஸ் கடும் விமர்சனம்

பிரதமர் மோடி ”காகிதப்புலி”: காங்கிரஸ் கடும் விமர்சனம்
அமெரிக்காவின் அழுத்தத்தால், இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணைய் இறக்குமதியை குறைத்துவிட்டதாக காங்கிரஸ் மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,

ஈரானிடம் இருந்து எண்ணைய் இறக்குமதி செய்வதை ஜூன் மாதத்தில் இந்தியா குறைத்துள்ளதாக, மத்திய அரசை விமர்சித்துள்ள காங்கிரஸ், பிரதமர் மோடியை காகிதப் புலி எனவும் அமெரிக்காவின் அழுத்தத்தால் விட்டுக் கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. 

ஈரானிடம் இருந்து இந்தியா, இறக்குமதி செய்யும் கச்சா எண்ணைய் 25 சதவீதம் அளவுக்கு ஜூன் மாதத்தில் குறைந்து விட்டதாகவும், கடந்த மாதம் கப்பலில் ஏற்றப்பட்ட பேரல்கள், நிகழ் மாதத்தில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அரசு மற்றும் தொழிற்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். 

இந்த நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இது குறித்து ஜெய்வீர் ஷெர்கில் கூறியதாவது:- ஈரானிடம் இருந்து எண்ணைய் இறக்குமதியை குறைத்ததன் மூலம், பிரதமர் மோடியின் வெளிநாட்டுக்கொள்கை குழப்பமானது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. 

உள்நாட்டில் எண்ணைய் விலையை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் இந்தியாவின் நலனைவிட அமெரிக்காவின் நலனுக்கே மீண்டும் ஒருமுறை முன்னுரிமை அளித்துள்ளார். ஈரானிடம் இருந்து எண்ணைய் இறக்குமதியை குறைத்தது, ஏழை மக்களின் பாக்கெட்டுகளை நேரடியாக நெருக்கும். விநியோகம் பாதிக்கப்பட்டு, எண்ணைய் விலை ஏற்றத்தை அதிகரிக்கும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்கும்

எண்ணைய் விவகாரத்தில், இந்திய அரசு எப்போதுமே இலாபம் ஈட்டும் நிலையிலும் இந்திய நுகர்வோர்கள் இழப்பு அடையும் நிலையிலும் உள்ளது ஏன்? என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும். ஈரானிடம் இருந்து எண்ணைய் இறக்குமதியை குறைத்துள்ளது, பிரதமர் மோடி காகிதப்புலி என்பதை தெளிவாக காட்டுகிறது. அமெரிக்காவின் அழுத்தத்துக்கு மோடி பணிந்து விட்டார்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனால், இவ்விரு நாடுகளுக்கு இடையேயான விரிசல் அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்கா ஈரான் நாட்டிற்கு பொருளாதார தடையும் விதித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானிடம் இருந்து இந்தியா பெட்ரோல் வாங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் விவகாரம்: சர்வதேச சதி எங்கு உள்ளது? பா.ஜனதாவிற்கு காங்கிரஸ் கேள்வி
ரபேல் விவகாரத்தில் சர்வதேச சதி எங்கு உள்ளது? என்று பா.ஜனதாவிற்கு காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது. #Rafaledeal #Congress #BJP
2. காங்கிரஸ் அதிகாரத்தை இழந்ததும் தன்னுடைய நிலையையும் இழந்து விட்டது - பிரதமர் மோடி தாக்கு
பா.ஜனதாவிற்கு எதிராக காங்கிரஸ் அவதூறு பரப்பினாலும் நாங்கள் வெற்றிப்பெறுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
3. கர்நாடக மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
கர்நாடக மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்தலில் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து பா.ஜனதா விலகியது.
4. எனது நண்பர் பிரதமர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள்; சுவராஜிடம் கூறிய டிரம்ப்
எனது நண்பர் பிரதமர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள் என சுஷ்மா சுவராஜிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
5. ரபேல் விவகாரத்தில் காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் - நிர்மலா சீதாராமன்
ரபேல் விவகாரத்தில் காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.