தேசிய செய்திகள்

குழந்தைகள் விற்பனை; அன்னை தெரசாவிற்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் ஆர்.எஸ்.எஸ். + "||" + Babies on sale RSS says withdraw Mother Teresa s Bharat Ratna

குழந்தைகள் விற்பனை; அன்னை தெரசாவிற்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் ஆர்.எஸ்.எஸ்.

குழந்தைகள் விற்பனை; அன்னை தெரசாவிற்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் ஆர்.எஸ்.எஸ்.
அன்னை தெரசாவிற்கு கொடுத்த பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கூறியுள்ளது.
புதுடெல்லி,

அன்னை தெரசா தொடங்கிய ‘மிஷனரீஸ் ஆப் சேரிட்டி’ என்கிற அறக்கட்டளை நாடுமுழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை வறுமையால் வாடுபவர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், முதியோர் ஆகியோருக்கும் பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக போலீஸ் விசாரித்து 2 கன்னியாஸ்திரிகளை கைது செய்தது. இது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அன்னை தெரசாவிற்கு கொடுத்த பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ராஞ்சியில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மற்றும் பா.ஜனதா தலைவர் அன்னை தெரசாவை விமர்சனம் செய்துள்ளனர். மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அன்னை தெரசா அறக்கட்டளையை தீங்கிழைக்கும் நகர்வாக இலக்காக்கப்படுகிறது என குற்றம் சாட்டினார். 

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் டெல்லி தலைவரான ராஜீவ் துளசி பேசுகையில், அறக்கட்டளைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் அன்னை தெரசாவிற்கு வழங்கப்பட்ட பாரத ரத்னாவை திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார். 

கறைபடிந்தவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்படுவதை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார். 1980-ம் ஆண்டு பாரத ரத்னா அன்னை தெரசாவிற்கு வழங்கப்பட்டது. அப்போதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது, இப்போதும் எழுந்துள்ளது. இது உண்மையென நிரூபிக்கப்பட்டால், அன்னை தெரசாவிற்கு வழங்கப்பட்டதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, இதனை நான் 100 சதவிதம் ஆதரிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. கலப்பு திருமணத்துக்கு ஆர்.எஸ்.எஸ். எதிரி அல்ல - மோகன் பகவத்
கலப்பு திருமணத்துக்கு ஆர்.எஸ்.எஸ். எதிரி அல்ல என மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
2. ‘மனம்போன போக்கில் பொய்களை பரப்புவது ராகுல்காந்தியின் வாடிக்கை’ ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய இணை செயலாளர் குற்றச்சாட்டு
மனம்போன போக்கில் பொய்களை பரப்புவது ராகுல்காந்தியின் வாடிக்கை என்று ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய இணை செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
3. அன்னை தெரசா நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து நாராயணசாமி மரியாதை
புதுவை பாரதி பூங்காவில் உள்ள அன்னை தெரசாவின் சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
4. அன்னை தெரசாவின் அபூர்வ பொக்கிஷங்கள்
கருணைக் கடலாக வாழ்ந்து மறைந்தவர் அன்னை தெரசா.
5. முஸ்லிம் அரசியல் அமைப்புடன் ஆர்.எஸ்.எஸ்.சை ஒப்பிட்டு பேசும் ராகுல் பக்குவமற்றவர்; பா.ஜ.க.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா நமது சொந்த மக்களையே பிரிக்கிறது என்று கூறிய ராகுல் காந்தி லண்டனிலேயே மன்னிப்பு கோர வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.