டென்னிஸ்

லண்டன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் + "||" + Wimbledon Williams beats Gorges to reach final reaction

லண்டன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

லண்டன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்
லண்டன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியமஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

லண்டன்,

 
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜை எதிர்க்கொண்டார். அனுபவ வீராங்கனையான செரீனா வில்லியமஸ் அதிரடியை காட்டினார். முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் மிக விரைவில் தனதாக்கினார். இரண்டாவது செட்டில் செரீனாவிற்கு ஜூலியா எதிர்ப்பை காட்டினார். இதனால் ஆட்டம் விறுவிறுப்பு பெற்றது. ஆனாலும் செரீனா ஆட்டத்தை தன்வசம் வைத்து விளையாடினார். இறுதியில் 6-4 என்ற கணக்கில் செட்டை தனதாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

இறுதிப்போட்டியில் மற்றொரு ஜெர்மனி வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பரை எதிர்க்கொள்கிறார். கெர்பர் சரியான எதிர்ப்பை கொடுப்பார் என கூறுகிறார் செரீனா வில்லியம்ஸ்.