கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணிக்கு 269 ரன்கள் வெற்றி இலக்கு + "||" + Kuldeep Takes 6 Wickets, India Bowl Out England For 268

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணிக்கு 269 ரன்கள் வெற்றி இலக்கு

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணிக்கு 269 ரன்கள் வெற்றி இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 269 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #INDvsENG


விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 

20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெறுகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் இங்கிலாந்து அணியை பேட் செய்யுமாறு பணித்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. 49.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 269 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் அதிகப்பட்சமாக பென்ஸ்டோக்ஸ் 50 ரன்களையும், பட்லர் 53 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 6 விக்கெட்களையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்களையும், சாகல் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.