தேசிய செய்திகள்

தாஜ்மஹால் கட்டுமானத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை - கலாசாரத்துறை மந்திரி மகேஷ் ஷர்மா தகவல் + "||" + No danger to structure of Taj Mahal: MoS for Culture

தாஜ்மஹால் கட்டுமானத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை - கலாசாரத்துறை மந்திரி மகேஷ் ஷர்மா தகவல்

தாஜ்மஹால் கட்டுமானத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை - கலாசாரத்துறை  மந்திரி மகேஷ் ஷர்மா தகவல்
தாஜ்மஹால் கட்டுமானத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கலாசாரத்துறை மந்திரி மகேஷ் ஷர்மா கூறியுள்ளார். #TajMahal
புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில், யமுனை கரையோரம் கம்பீரமாக காட்சியளிக்கும் தாஜ்மஹாலை, நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுரசித்து வருகின்றனர். இந்த புராதன சின்னத்தை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு நேற்று கண்டனம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கலாசாரத்துறை  மந்திரி மகேஷ் ஷர்மா கூறியதாவது:

தாஜ்மஹால் கட்டுமானத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், தாஜ்மஹாலின் இயல்பான வெண்மை நிறம் மாறவில்லை . இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறினார்.