மாநில செய்திகள்

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்டு 15–ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை + "||" + Water should be opened on August 15 GK Vasan demand

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்டு 15–ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்டு 15–ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை
தமிழக விவசாயிகள் இந்த வருடம் சம்பா சாகுபடி செய்வதற்கு ஏதுவாக மேட்டூர் அணையை ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் திறக்க வேண்டிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
சென்னை, 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக விவசாயிகள் இந்த வருடம் சம்பா சாகுபடி செய்வதற்கு ஏதுவாக மேட்டூர் அணையை ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் திறக்க வேண்டிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் காவிரியில் இருந்து அணைகளுக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டும் நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு ஆகஸ்டு 15–ந் தேதி டெல்டா சம்பா சாகுபடிக்காக பாசனத்தண்ணீரை திறந்துவிட வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, ஆணையக் கூட்டமும், ஒழுங்காற்றுக்குழு கூட்டமும் முடிவடைந்த நிலையில் தமிழகத்துக்கான காவிரி நதிநீரை இனிமேல் உரிய காலத்தில், உரிய நேரத்தில், முறையாக, முழுமையாக திறந்துவிட ஆணையம் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மத்திய பா.ஜ.க. அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தமிழக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு இந்த மாதம் (ஜூலை) மற்றும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) ஆகியவற்றை தொடர்ந்து இனி வரும் காலந்தோறும் உரிய பங்கீடு சரியாக கிடைக்க வேண்டும் என்பதில் முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.