மாநில செய்திகள்

நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மருத்துவ கலந்தாய்வை தொடருவதா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் + "||" + Dr. anbumani Ramadoss condemned

நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மருத்துவ கலந்தாய்வை தொடருவதா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மருத்துவ கலந்தாய்வை தொடருவதா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்
நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மருத்துவ கலந்தாய்வை தொடருவதா? என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மருத்துவ கலந்தாய்வை தொடருவதா? என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வுகளை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆணையிட்டுள்ள நிலையில், அதை மதிக்காமல் கலந்தாய்வை தொடரப்போவதாக இந்திய மருத்துவக் குழு அறிவித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் இச்செயல் கண்டிக்கத்தக்கது.

மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுப்பதற்காக இந்திய மருத்துவக் குழு கூறியிருக்கும் காரணங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டதால், ஏற்கனவே வெளியிடப்பட்ட தரவரிசை செல்லாததாகிவிட்டது. அதன்பின் எந்த தரவரிசை அடிப்படையில் இந்திய மருத்துவக் குழு கலந்தாய்வை நடத்த முடியும்?. புதிய தரவரிசை அடிப்படையில் புதிதாக கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறி விட்டதால், பழைய கலந்தாய்வை நிறுத்த வேண்டியது கட்டாயம் ஆகும்.

ஆனால், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கலந்தாய்வை தொடரப்போவதாக மருத்துவக் குழு கூறியிருப்பது குழந்தைத் தனமானது ஆகும். எனவே, நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கி, புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிப்பதற்கு பொறுப்பான சி.பி.எஸ்.இ. மற்றும் அதை நிர்வகிக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் உடனடியாக இந்திய மருத்துவக் குழுவை தொடர்பு கொண்டு ஏற்கனவே வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியல் செல்லாததாகி விட்டதாக தெரிவிக்க வேண்டும்.

புதிய தரவரிசைப் பட்டியல் அடுத்த 2 வாரங்களில் வெளியிடப்படும் என்பதால் அதுவரை கலந்தாய்வை நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்த வேண்டும். இதற்கெல்லாம் மேலாக இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முடிவை சி.பி.எஸ்.இ. கை விட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...