மாநில செய்திகள்

வனப்பகுதிகளில் ‘பிளாஸ்டிக்’ தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு, வனத்துறை அமைச்சர் உத்தரவு + "||" + The Minister of Forests orders the officials

வனப்பகுதிகளில் ‘பிளாஸ்டிக்’ தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு, வனத்துறை அமைச்சர் உத்தரவு

வனப்பகுதிகளில் ‘பிளாஸ்டிக்’ தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு, வனத்துறை அமைச்சர் உத்தரவு
வனப்பகுதிகளில் ‘பிளாஸ்டிக்’ பொருட்கள் தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும், என்று அதிகாரிகளுக்கு, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, 

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தில் மாவட்ட வனப்பாதுகாவலர்கள், வன உயிரினக் காப்பாளர்கள், புலிகள் காப்பக துணை இயக்குனர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார். இதில், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஏ.வெங்கடேஷ், சென்னை கிறிஸ்தவ கல்லூரி உதவி பேராசிரியர் பி.செல்வ சிங் ரிட்சர்டு ஆகியோர் எழுதிய ‘களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சோலைக்காடுகள் -பல்லுயிர் பாதுகாப்பு’ எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்நூலினை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ரவிகாந்த் உபாத்யாய் பெற்றுக்கொண்டார்.

கருத்தரங்கில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

ஒவ்வொரு மாவட்ட வன அலுவலர்களும் அவர்களுடைய பகுதியில் தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வனப்பகுதியில் உள்ள மக்களுக்கு வனத்தில் தீ ஏற்படாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு மாவட்ட வனப்பகுதியில் தீ விபத்துகள் ஏற்பட்டால் அருகிலுள்ள மாவட்ட அலுவலர்கள் உடனடியாக அம்மாவட்டத்திற்கு வந்து தீ அணைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சந்தனமர கிடங்கு, செம்மர கிடங்குகளுக்கு பாதுகாப்புகளை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவ குணம் உள்ள தாவரங்கள் நடும் திட்டத்தை மக்கள் பெரிதும் வரவேற்கின்றார்கள் எனவே இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்..

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘உலக சுற்றுச்சூழல் தினத்தன்று அறிவித்த பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்கிடும் நோக்கில் வனத்துறையின் அனைத்து இடங்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

அனைத்து வன அலுவலகங்கள், சுற்றுலா இடங்கள், சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் மற்றும் வனப்பகுதியிலுள்ள வழிபாட்டு தலங்களிலும், நீர் நிலைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.