மாநில செய்திகள்

பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கோவை கல்லூரி மாணவி மரணம்: பயிற்சியாளர் கைது + "||" + Coimbatore: 2nd year BBA student Lokeshwari, died after falling from third floor of her college building yesterday.

பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கோவை கல்லூரி மாணவி மரணம்: பயிற்சியாளர் கைது

பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கோவை கல்லூரி மாணவி மரணம்:  பயிற்சியாளர் கைது
தேசிய பேரிடர் பயிற்சியின் போது கோவை கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை,

தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. இதில் கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது பூகம்பம் உள்ளிட்ட நிகழ்வுகளின்போதோ கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

3 மாடிகளை கொண்ட இந்த கல்லூரியில் 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவது போலவும் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி பெறுவதற்காக மாணவிகள் 2-வது மாடியில் நின்றுகொண்டு இருந்தனர். கீழே மாணவிகளை காப்பாற்றுதவற்காக சிலர் வலையை பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர்.

இந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்துவந்த லோகேஸ்வரி (வயது 19) என்பவரும் பயிற்சியில் கலந்துகொண்டார். இவர் 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்க தயக்கம் காட்டினார். அப்போது மேலே நின்றுகொண்டிருந்த பயிற்சியாளர் ஒருவர் தைரியமாக குதி என்று கூறி உற்சாகப்படுத்தினார். ஒருகட்டத்தில் மாணவியின் கையைப் பிடித்து கீழே குதிக்கவைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகேஸ்வரியின் தலை முதல் மாடியில் இருந்த சிலாப்பில் இடித்தது. இதில் அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் பலமாக அடிபட்டது. இதனை பார்த்துக்கொண்டு இருந்த மாணவிகள் பயத்தில் அலறினர்.

காயமடைந்த மாணவி லோகேஸ்வரி உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முதலுதவி பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவை-சேலம் கட்டணத்தை குறைக்க முடிவு
கோவையில் இருந்து செல்லும் சதாப்தி எக்ஸ்பிரசில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் சேலத்துக்கு கட்டணத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. போலி மது விற்பனையா? கோவை டாஸ்மாக் கடைகளில் போலீசார் சோதனை
கோவையில் டாஸ்மாக் கடைகளில் போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் சோதனை நடத்தினார்கள்.
3. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, மதுரைக்கு மீண்டும் பஸ்கள் இயக்கம்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, மதுரைக்கு மீண்டும் நேற்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
4. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத கோவை அரசு மருத்துவமனை பெண் டாக்டருக்கு ‘நோட்டீசு’
கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத கோவை அரசு மருத்துவமனை பெண் டாக்டருக்கு ‘நோட்டீசு’ அனுப்பும்படி வேலூர் கூடுதல் விரைவு கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
5. நெல்லை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு
நெல்லை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.