தேசிய செய்திகள்

கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள நாடு முழுவதும் உஷார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு + "||" + 100 NDRF Teams Deployed In 71 Locations In India To Deal With Floods

கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள நாடு முழுவதும் உஷார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள நாடு முழுவதும் உஷார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு
கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள நாடு முழுவதும் உஷார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு வைக்கப்பட்டுள்ளது. #NDRF
புதுடெல்லி,

நாடு முழுவதும் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக 100 பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் தலா 45 பேர் என்ற வகையில் மொத்தம் 4,500 பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தேவை ஏற்படும் பட்சத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து மீட்பு பணிக்கு செல்வதற்காக கூடுதல் குழுவினர் தயார் நிலையில் இருக்கின்றனர்.
மொத்தம் 14 மாநிலங்களுக்கு உள்பட்ட 71 பகுதிகளில் பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 97 குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிதெரிவித்தார்.

இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர்வள ஆணையம், இதர அரசு அமைப்புகள் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்பில் இருப்பார்கள் என்றும், ஆபத்து ஏற்படும் தருணங்களில் தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

டெல்லியில், உள்ள தேசிய பேரிடர் மீட்புக் கழக கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும், மீட்புப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.நாட்டில் தற்போது பருவமழைக் காலம் என்பதால், மழை வெள்ள ஆபத்து உடைய பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக பேரிடர் மீட்புக் குழுவினர் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

ஆபத்து நிலையில் உள்ள பகுதிகள் மற்றும் மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளின் கோரிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்


தொடர்புடைய செய்திகள்

1. பெய்ட்டி புயல் கரையை கடந்தது: ஏனாமில் பலத்த காற்றுடன் கனமழை
பெய்ட்டி புயல் கரையை கடந்தபோது ஏனாமில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன.
2. வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4. சென்னையில் இரவு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் இரவு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
5. ராமேசுவரத்தில் விடிய விடிய கொட்டிய கனமழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.