மாநில செய்திகள்

பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை + "||" + Student's death during disaster training: At the chief secretariat Chief Minister advised

பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை

பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை
பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயரிழப்பு குறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் அன்பழகனுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை

கல்லூரி மாணவி உயிரிழப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது  விசாரணை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறி உள்ளார்.

தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. இதில் கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது பூகம்பம் உள்ளிட்ட நிகழ்வுகளின்போதோ கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த  கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்துவந்த லோகேஸ்வரி (வயது 19) என்பவரும் பயிற்சியில் கலந்துகொண்டார். இவர் 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்க தயக்கம் காட்டினார். அப்போது மேலே நின்றுகொண்டிருந்த பயிற்சியாளர் ஒருவர் தைரியமாக குதி என்று கூறி உற்சாகப்படுத்தினார். ஒருகட்டத்தில் மாணவியின் கையைப் பிடித்து கீழே குதிக்கவைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகேஸ்வரியின் தலை முதல் மாடியில் இருந்த சிலாப்பில் இடித்தது. இதில் அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் பலமாக அடிபட்டது. இதனை பார்த்துக்கொண்டு இருந்த மாணவிகள் பயத்தில் அலறினர்.

காயமடைந்த மாணவி லோகேஸ்வரி உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முதலுதவி பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த பயிற்சி தேசிய பேரிடர் மேலாண்மை சார்பாக நடத்தப்பட்டுள்ளது. ஆனால் லோகேஸ்வரிக்கு பயிற்சி கொடுத்த அந்த குறிப்பிட்ட பயிற்சியாளர்,தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை சேர்ந்தவரே கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறும் போது ,

கல்லூரி மாணவி உயிரிழப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உரிய பாதுகாப்புடன் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

பேரிடர் பயிற்சியில் தனியார் கல்லூரி மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார். பேரிடர் பயிற்சி தந்தவர் கவனக்குறைவால் மாணவி லோகேஸ்வரி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி உயரிழப்பு குறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் அன்பழகனுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

கல்லூரி வளாக நிகழ்ச்சிகள், அவற்றுக்கு பெற வேண்டிய வழிமுறைகள் பற்றி முடிவெடுக்க விவாதம் நடத்தபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...