உலக செய்திகள்

வடகொரியா அதிபர் கிம் எழுதிய மிகவும் அருமையான கடிதம் புகழ்ந்த டொனால்டு டிரம்ப் + "||" + Trump just got a “very nice note” from Kim Jong Un. But North Korea isn’t being very nice.

வடகொரியா அதிபர் கிம் எழுதிய மிகவும் அருமையான கடிதம் புகழ்ந்த டொனால்டு டிரம்ப்

வடகொரியா அதிபர் கிம் எழுதிய மிகவும் அருமையான கடிதம் புகழ்ந்த டொனால்டு டிரம்ப்
வடகொரியாவின் அதிபர் கிம் எழுதிய கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டு 'மிகவும் அருமையான' கடிதம் என டொனால்டு டிரம்ப் புகழ்ந்து உள்ளார். #DonaldTrump #KimJongUn
வாஷிங்டன்

வடகொரியா  அதிபர் கிம் ஜாங்-உன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு  ஒரு கடிதம் எழுதி இருந்தார் (ஜூலை ஆறு தேதியிட்டது) அவர் எழுதிய கடிதத்தை டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

கிம் எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ள டிரம்ப் ''மிகவும் அருமையான குறிப்பு இது '' எனத் தெரிவித்துள்ளார்.

அதில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் தற்போது எடுத்து வரும் முயற்சிகள் புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்புவதாக  கிம் எழுதி உள்ளார்

நான்கு பத்தி கொண்டிருக்கும் அந்த கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆவணத்தை அதிபர் டிரம்ப் வியாழக்கிழமையன்று வெளியிட்டுள்ளார்.

'' மாண்புமிகு அதிபரின் ஆற்றல் மிகுந்த மற்றும் அசாதாரண முயற்சியை நான் மிகவும் பாராட்டுகிறேன்'' 

இரு தரப்பு நம்பிக்கையானது நடைமுறைக்குரிய செயல்பாடுகளை எடுப்பதற்கான எதிர்கால செயல்முறையை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

''இரு தரப்பு உறவுகளை ஊக்குவிப்பதில் புதியதொரு சகாப்தத்துக்கான தொடக்க செயல்முறையானது, நம்முடைய அடுத்த சந்திப்பை முன்னெடுத்துச் செல்லும்'' என அக்கடிதத்தில் வடகொரிய தலைவர் கிம் குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்ட டிரம்ப் '' பெரிய முன்னேற்றம் நடந்துகொண்டிருக்கிறது'' என குறிப்பிட்டு உள்ளார்.