மாநில செய்திகள்

சிலைக் கடத்தல் விவகாரம்: தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது ஐகோர்ட் கண்டனம் + "||" + Statue of smuggling The Government of Tamil Nadu acts relentlessly The condemned by the Court

சிலைக் கடத்தல் விவகாரம்: தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது ஐகோர்ட் கண்டனம்

சிலைக் கடத்தல் விவகாரம்: தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது  ஐகோர்ட் கண்டனம்
சிலைக் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை

சிலை கடத்தலை தடுக்க கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன்  என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் நீதிபதி  மீண்டும் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

2021-க்குள் 3000 கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் என ஐகோர்ட்டில் இன்று  அறநிலையத்துறை பதில் மனு தாக்கல்  செய்தது

இந்த வழக்கில் இன்று நீதிபதி மகாதேவன் கூறியதாவது:-

கோயில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் கட்ட 2021 வரை அவகாசம் அளிக்க முடியாது. 2021 ஆம் ஆண்டு வரை அவகாசம் தந்தால் எஞ்சியுள்ள சிலைகளும் திருடப்படும். காவல்துறையுடன் ஆலோசித்து பாதுகாப்பு அறைகளை விரைவாக கட்டி முடிப்பது பற்றி அறிக்கை வேண்டும். பாதுகாப்பு அறைகள் அமைப்பதற்கான காலக்கெடுவை மாற்றி அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

சிலைகளுக்கான பாதுகாப்பு அறை விவகாரத்தில் மெத்தனம் தொடர்ந்தால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என கூறி உள்ளார்.