மாநில செய்திகள்

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணையம் 29ம் தேதி விசாரணை + "||" + Jayalalitha has been treated Apollo Hospital Arumugassamy Commission The trial of 29

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணையம் 29ம் தேதி விசாரணை

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணையம் 29ம் தேதி விசாரணை
ஜெயலலிதா மரணம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி அப்போலோவில் நேரில் சென்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. #Apollo #Arumugassamy #Jayalalitha
சென்னை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஆணையத்தில் இதுவரை 30 -க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சசிகலாவுக்கு எதிராக ஆணையத்தில் பிரமாணப் பத்திரம், சாட்சியம் அளித்தவர்களிடமும் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி அப்போலோ  மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. ஜூலை 29ல் இரவு 7 மணி முதல் 45 நிமிடங்கள் நடைபெறும் இந்த விசாரணையின் போது ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை, சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்கிறது.

மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் இருந்த அறை உள்ளிட்டவை குறித்தும் விசாரிக்கிறது. முன்னதாக விசாரணை ஆணையம் கடந்த 15ஆம் தேதி ஆய்வு செய்ய இருந்த நிலையில் அப்போலோ மறுப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 18ம் தேதி பத்திரிகையாளர் குருமூர்த்தி ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 20ல் மறுகுறுக்கு விசாரணைக்கு ஆஜராக பூங்குன்றன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயனுக்கும், மறுவிசாரணைக்கு ஆஜராக ராமலிங்கம் ஐஏஎஸ்-க்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...