உலக செய்திகள்

ஜாகீர் நாயக்கை நாடு கடத்த தேவையானதை இந்தியா செய்ய வேண்டும் - மலேசிய மந்திரி + "||" + India should make necessary deportation orders for Zakir Naik; we will follow rule of law: Malaysia's HRD minister

ஜாகீர் நாயக்கை நாடு கடத்த தேவையானதை இந்தியா செய்ய வேண்டும் - மலேசிய மந்திரி

ஜாகீர் நாயக்கை  நாடு கடத்த தேவையானதை இந்தியா செய்ய வேண்டும் -  மலேசிய மந்திரி
ஜாகீர் நாயக்கை நாடு கடத்த தேவையானதை இந்தியா செய்ய வேண்டும் நாங்கள் சட்டத்தின் விதிகளை பின்பற்றுவோம் என மலேசிய மனிதவள மந்திரி காலா கூறி உள்ளார். #ZakirNaik
கோலாலம்பூர்

மும்பையைச் சேர்ந்த 51 வயதான மதபோதகர் ஜாகீர் நாயக். இவரது மதபோதனைகளுக்கு சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினர் இடையே பெரும் ஆதரவு இருந்து வருகிறது. அதேநேரத்தில் ஜாகீர் நாயக்கின் போதனைகளால் சர்ச்சைகளும் ஏற்பட்டன. இவரது பேச்சுகள் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டுமாறு செயல்பட்டதாக குற்றம்சாட்டி தேசிய புலனாய்வு முகமை ஜாகீர் நாயக் மீது வழக்குப்பதிவு செய்தது. இது தவிர சட்டவிரோத பணபரிமாற்றம், வெறுப்பு பிரசாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து மலேசியா நாட்டில் தஞ்சமடைந்த ஜாகீர் நாயக், தற்போது வரை இந்தியா திரும்பவில்லை. இவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து வழக்கு விசாரணையில் ஆஜர்படுத்த அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஜாகீர் நாயக் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பிரதமர் மகாதிர் மொகமத் நாங்கள்  ஜாகீர் நாயக்கை  வெளியேற்ற மாட்டோம்.ஏனெனில் அவர் இங்கு நிரந்தர குடியுரிமை பெற்றவர் என கூறி இருந்தார்.

பிரதமர் மகாதிர் மொகமத் அவரை நாட்டை விட்டு வெளியேற்றாததற்காக ஜாகீர் நாயக் நேற்று நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்  ஜாகீர் நாயிக்கிற்கு தேவையான நாடு கடத்துதல் உத்தரவை இந்தியா வழங்க வேண்டும்  நாங்கள் சட்டத்தின் விதிகளை பின்பற்றுவோம்: என  மலேசியாவின் மனிதவள  மந்திரி காலா  கூறி உள்ளார்.

இந்தியாவுக்கு ஊக்கமளிக்கும் வகையில், மலேசிய மனிதவள அமைச்சர் எம்.காலா சீகரன்  , மலேசிய பிரதமர் மகாதிர் மமொகமதுவின் சர்ச்சைக்குரிய பிரசங்கிக்கான ஜாகீர் நாயக்கை நாடு கடத்த மாட்டேன் என்ற முடிவுக்கு   எதிராக உள்ளார்.

இது குறித்து காலா சீகரன் கூறியதாவது  கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் ஜாகிர் நாயக் குறித்து விவாதம் எழுப்பப்பட்டது. இந்திய அரசாங்கம் தேவையான நாடு கடத்தலை ஒழுங்கு செய்ய அனுமதிக்க வேண்டும். நாங்கள் சட்டத்தின் விதிகளை பின்பற்றுவோம்,ஆனால் கீழ் நிலை வேண்டுகோளை இந்திய அரசாங்கம் செய்ய வேண்டும்,

இந்த விஷயங்களை செய்வதற்கு சரியான வழி,   இந்த விஷயத்தை முடிவு மேற்கொள்வது அரசாங்கமோ அல்லது ஒரு மனிதனோ கூடாது. நியாயத்தை வழங்குவதற்கான கடமை இருப்பதால், நீதிமன்றங்களில் சட்டத்தால் அது முடிவு செய்யப்பட வேண்டும்.