தேசிய செய்திகள்

மாடல் அழகியை குடும்பத்துடன் பணயக் கைதிகளாக பிடித்து வைத்து காதலிக்க வற்புறுத்திய இளைஞர் + "||" + Bhopal model, held hostage by jilted lover in flat, asks for mobile charger from cops

மாடல் அழகியை குடும்பத்துடன் பணயக் கைதிகளாக பிடித்து வைத்து காதலிக்க வற்புறுத்திய இளைஞர்

மாடல் அழகியை குடும்பத்துடன் பணயக் கைதிகளாக பிடித்து வைத்து  காதலிக்க வற்புறுத்திய இளைஞர்
காதல் கிறுக்கன் மாடல் அழகியையையும் அவரது பெற்றோரையும் அறையில் பூட்டிவைத்து அழகியை காதலிக்குமாறு இளைஞர் ஒருவர் அடம் பிடித்து வருகிறார் மாடல் அழகியை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
போபால்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு  மாடி குடியிருப்பில்  5-வது மாடியில் உள்ள ஒரு பிளாட்டில் மாடல் அழகி ஒருவரை  இளைஞர் ஒருவர்  சிறைவைத்து உள்ளார்.  மும்பையை சேர்ந்த அந்த மாடல் அழகி 2 மாதங்களுக்கு முன்தான் போபால் வந்து உள்ளார். ஏற்கனவே அவருக்கு அறிமுகமான  இளைஞர் ஒருவர்தான் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார். தன்னை காதலிக்குமாறும் , திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருகிறார். இதனை  உறுதி செய்ய முத்திரை பத்திரத்தில்  எழுதி தரவேண்டும் என போலீசாரிடம்  முத்திரை பத்திரம் கேட்டு உள்ளார். போலீசார் அந்த பெண்ணை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரோஹித்  பிளாட்டின் உள்ளே பெண்ணை  பணயக்கைதியை அடைத்து வைத்துள்ளான். என்னை காதலிக்கிறேன் என்னை திருமணம் செய்து கொள்கிறேன்  என கூறினால் உன்னை விடுவிக்கிறேன் என கூறி உள்ளான். நாங்கள் அந்தப் பெண்ணைப் பார்த்தோம், அவள் இரத்தம் வழிந்தபடி இருந்தார்.

எங்களிடம் ஒரு முத்திரை பத்திரம்  மற்றும் மொபைல் சார்ஜரும்   எங்களிடம் அவன் கேட்டான்.   நாங்கள் முரட்டுத்தனமாக உள்ளே செல்ல முயற்சித்தபோது, அவர் எங்களை  மிரட்டி பின்வாங்க வைத்தான். ரோகித் பெண்ணின் பெற்றோரையும் அவன் மற்றொரு அறையில் பூட்டி வைத்து உள்ளான்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் மும்பையில் இருந்து அந்த பெண்  போபாலுக்கு வந்து உள்ளார். மும்பையில் அவர்  ரோகித்தை சந்தித்து உள்ளார்.

ரோகித் அவளை காதலிப்பதை  ஒப்புக் கொள்ளாவிட்டால், அந்த பெண்ணையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்வதாக மிரட்டி உள்ளார். அவர் பல இடங்களில் ஏற்கனவே தன்னை வெட்டிக்கொண்டதாக கூறியுள்ளார்.

பூட்டி இருந்த கதவுக்கு வெளியே இருந்து ஜீ நியூஸ் செய்தியாளர் பேசும் போது அவரிடம் ரோகித் கூறியதாவது:-

நான் போபால் வந்தவுடன்  என்மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  அவர்கள் என்னை தொந்தரவு செய்தார்கள், என்னை துன்புறுத்தினார்கள், நான் அதற்காகத்தான்  இந்த நடவடிக்கையை எடுத்தேன்.  வெளியே கூட்டம் அங்கு இல்லை என்றால், நான் முன்பு வெளியே வந்திருப்பேன்." என கூறி உள்ளான்.

அந்த பெண்ணை போலீசார் மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...