மாநில செய்திகள்

ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்தேன், மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல - கமல்ஹாசன் + "||" + Not to abolish superstitions Kamal

ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்தேன், மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல - கமல்ஹாசன்

ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்தேன், மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல - கமல்ஹாசன்
ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்தேன், மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,

கமல் ஒரு போலி பகுத்தறிவாளர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறினார். 

இந்தநிலையில் இது குறித்து சென்னையில் கமல்ஹாசன் செய்தியார்களிடம் கூறியதாவது:

ஒரே நேரத்தில் சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தக்கூடாது. லோக் ஆயுக்தா சட்டம் நீர்த்து போன நிலையில் உள்ளது.  தான் ஒரு போலி பகுத்தறிவாளர் என்று கூற தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது. ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்தேன், மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல. ஆழ்வார்பேட்டை ஆண்டவா என தொண்டர்கள் அழைப்பதை நிறுத்த அறிவுறுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.