தேசிய செய்திகள்

நினைவுச்சின்னங்களை புகைப்படம் எடுக்க இனி தடை இல்லை + "||" + Now You Don't Need Prior Permission To Do Professional Photography At ASI Protected Monuments

நினைவுச்சின்னங்களை புகைப்படம் எடுக்க இனி தடை இல்லை

நினைவுச்சின்னங்களை புகைப்படம் எடுக்க இனி தடை இல்லை
நினைவுச்சின்னங்களில், செல்ஃபி, புகைப்படம் எடுப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்திய தொல்லியல் துறையின் கீழ் 3,686 நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது.  இவற்றின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு கருதி புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டது.  தொல்லி யல் துறையின் அனுமதியுடன், தொழில் முறை புகைப்பட கலைஞர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், டெல்லியில், தொல்லியல் துறையின் புதிய தலைமை அலுவலகத்தை பிரதமர் நரேந்திர திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து,  நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களில் புகைப்படம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்'' என்றார்.

இதனையடுத்து  தொல்லியல் துறையின் கூடுதல் பொது இயக்குனர் ஊர்மிளா சந்த் சர்மா பிறப்பித்துள்ள உத்தரவில்,

''மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, அஜந்தா -எல்லோரா குகைகள், தாஜ்மஹாலின் முக்கிய கல்லறை மற்றும் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே அரண்மனை ஓவியங்களை தவிர மற்ற அனைத்து நினைவிடங்களையும் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

 மத்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் நினைவுச்சின்னங்கள் அருகே புகைப்படம் மற்றும்  செல்ஃபி எடுத்துகொள்ளலாம் என தொல்லியல் துறை கூறியுள்ளது.