உலக செய்திகள்

பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு + "||" + Death toll in Mastung blast in Balochistan rises to 128: Pakistan media

பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு

பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது குண்டு வெடிப்பு:  பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு
பாகிஸ்தானில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. #Mastungblast
பெஷாவர்,

பாகிஸ்தான் நாட்டில் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் கடந்த மே மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஜூலை மாதம் 25-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  இதற்காக அந்த நாட்டில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், வேட்பாளர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக அந்த நாட்டு உளவுத்துறை எச்சரித்திருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பானு    மற்றும் வடக்கு வசிரிஷ்தான் மாவட்ட எல்லைப்பகுதியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.  அப்போது கூட்டத்திலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவிலிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று திடீரென வெடித்தது. இந்த பயங்கர குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர்.  

இந்த குண்டு வெடிப்பு நடந்த, அடுத்த சில மணி நேரத்தில், பலுசிஸ்தான் மாகாணம், மஸ்டங் பகுதியில், சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. 

பலுசிஸ்தான் அவாமி கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பில், அந்த கட்சியின் தலைவர் சிராஜ் ரைசனி உட்பட, 95 பேர் இறந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

இந்தநிலையில் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடககங்கள் தெரிவித்துள்ளது.   இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என, அஞ்சப்படுகிறது.