மாநில செய்திகள்

கல்லூரியில் நடந்த பயிற்சியின் போது உயிர் இழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு + "||" + Ettappadi Palanisamy orders Rs 5 lakh relief for the family of the girl

கல்லூரியில் நடந்த பயிற்சியின் போது உயிர் இழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

கல்லூரியில் நடந்த பயிற்சியின் போது உயிர் இழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
கல்லூரியில் நடந்த பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்த மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, 

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், வெள்ளிமலைப்பட்டிணம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்த, ஆலாந்துறை கிராமத்தைச் சேர்ந்த நல்லாக்கவுண்டரின் மகள் லோகேஸ்வரி 12-ந் தேதியன்று கல்லூரியில் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் இழந்தார்.

இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். உயிர் இழந்த லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உரிய அனுமதி பெறாமல், கல்லூரி மாணவர்களுக்கு முறையற்ற பயிற்சி அளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல் துறை மற்றும் கல்லூரிக் கல்வி துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

எனது உத்தரவின் பேரில், காவல் துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதில், முறையற்ற பயிற்சி வழங்கிய ஆறுமுகம் நேற்று இரவே கைது செய்யப்பட்டார். விசாரணை நடைபெற்று வருகிறது.

உயிர் இழந்த லோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.