மாநில செய்திகள்

கோவை கல்லூரி மாணவி பலியான விவகாரம்; போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய நபர் கைது + "||" + Coimbatore college student victim affair; one arrested for making fake certificate

கோவை கல்லூரி மாணவி பலியான விவகாரம்; போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய நபர் கைது

கோவை கல்லூரி மாணவி பலியான விவகாரம்;  போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய நபர் கைது
கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் கல்லூரி மாணவி பலியான விவகாரத்தில் பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை,

கோவையை அடுத்த நரசீபுரம் விராலியூர் சாலையில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நாட்டு நலப்பணித்திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. 

இந்த பயிற்சியை ஆறுமுகம் (வயது 31) என்பவர் நடத்தினார்.  இதில், செய்முறை பயிற்சியாக கல்லூரி வளாகத்தில் உள்ள 3 மாடி கட்டிடத்தின் 2-வது மாடியின் ஜன்னல் மேல் உள்ள ஷன் ஷேடு பகுதியில் இருந்து மாணவர்களை கீழே குதிக்க வைத்தனர். பயிற்சியாளர் ஆறுமுகம் ஷன் ஷேடு பகுதியில் நின்று கொண்டு மாணவர்கள் ஒவ்வொருவராக குதிக்கவைத்தார்.

இந்த பயிற்சியில் தொண்டா முத்தூர் அருகே உள்ள நாதே கவுண்டன்புதூரை சேர்ந்த நல்லா கவுண்டர்-சிவகாமி தம்பதியரின் மகள் லோகேஸ்வரி (19) என்ற மாணவியும் பங்கேற்றார். இவர் அந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

பயிற்சியின் போது 2-வது மாடியின் ‘சன் ஷேடு’ (சிலாப்) பகுதியில் மாணவி லோகேஸ்வரி நின்றார். உயரமான இடத்தில் இருந்து கீழே பார்த்ததும் பயம் ஏற்பட்டதால் அவர் உட்கார்ந்து கொண்டார்.

ஆனால் பயிற்சியாளர் ஆறுமுகம் விடாப்பிடியாக, குதிக்குமாறு வற்புறுத்தி லோகேஸ்வரியை வலுக்கட்டாயமாக கீழே தள்ளி விட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் தொண்டாமுத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் லோகேஸ்வரியை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவத்தில் பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.  அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி பயிற்சியாளர் என தெரிய வந்தது.

ஆறுமுகம் டெல்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பயிற்சி பெற்றதாகவும், அதற்கான கடிதத்தை கல்லூரி நிர்வாகத்திடம் காண்பித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கடிதத்தை போலீசார் ஆய்வு செய்ததில் அந்த கடிதம் போலியானது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இந்த நிலையில், போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவரிடம் ஈரோட்டை சேர்ந்த தனிப்படை காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.