தேசிய செய்திகள்

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிளை: தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் பிரதமர் மோடி, 21–ந் தேதி தொடங்கி வைக்கிறார் + "||" + One branch in each district: Banking Service in Post Offices

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிளை: தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் பிரதமர் மோடி, 21–ந் தேதி தொடங்கி வைக்கிறார்

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிளை: தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் பிரதமர் மோடி, 21–ந் தேதி தொடங்கி வைக்கிறார்
தபால் நிலையங்களில் வங்கி சேவை அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி 21–ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,

தபால் நிலையங்களில் வங்கி சேவை அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி 21–ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

கிராமங்களில் வங்கி சேவை

நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் வங்கி சேவையை பயன்படுத்தும் நோக்கில், ஜன்தன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன் மூலம் லட்சக்கணக்கான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக வங்கி நடைமுறைகள் மற்றும் நிதி சேவைகள் அனைத்தும் கிராமப்புறங்களையும் சென்றடையும் நோக்கில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தபால் நிலையங்களில் வங்கி சேவையை தொடங்க திட்டமிடப்பட்டது.

செல்போன் செயலி அறிமுகம்

‘இந்திய தபால் நிலைய செலுத்து வங்கி (ஐ.பி.பி.பி.)’ எனப்படும் இந்த திட்டம் வருகிற 21–ந் தேதி தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அத்துடன் ஐ.பி.பி.பி. செல்போன் செயலியையும் அவர் அறிமுகம் செய்கிறார்.

இதில் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு கிளையாவது தொடங்கப்படுகிறது. இதில் 2 கிளைகள் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், மீதமுள்ள 648 கிளைகள் அன்றைய தினம் ஒரே நேரத்தில் செயல்பாட்டுக்கு வருகிறது.

வங்கி சேவைகள்

இந்த தபால் நிலைய வங்கிகளில், பிற வங்கிகளில் இருப்பது போல அனைத்து சேவைகளும் நடைபெறும். குறிப்பாக ரூ.1 லட்சம் வரையிலான டெபாசிட் பெற்றுக்கொள்ளுதல், எந்த வங்கி கணக்குக்கும் பணப்பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட நிதி சேவைகளும், செல்போன் மூலம் பரிவர்த்தனை போன்ற டிஜிட்டல் சேவைகளும் இந்த வங்கிகள் மூலம் பெற முடியும். மேலும் ஆர்.டி.ஜி.எஸ்., நெப்ட், ஐ.எம்.பி.எஸ். போன்றவை மூலமான பணப்பரிமாற்றமும் நடத்த முடியும்.

இதைப்போல தொலைபேசி, மின்சாரம், டி.டி.எச். கட்டணம் மற்றும் கல்லூரி கட்டணம் உள்ளிட்டவையும் செலுத்த முடியும். மேலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், மானியங்கள், ஓய்வூதியம் போன்ற அரசின் பணப்பலன்களும் இந்த வங்கி மூலம் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

அஞ்சலக கணக்குகள்

இந்த வங்கி சேவையை நாட்டில் உள்ள 1.55 லட்சம் தபால் அலுவலகங்களுக்கும் இந்த ஆண்டுக்குள் விரிவுபடுத்த அரசு முயன்று வருவதாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் 17 கோடி அஞ்சலக சேமிப்பு திட்ட கணக்குகளை இந்த திட்டத்தின் கீழ் இணைக்க அனுமதி பெறப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

தபால் நிலைய வங்கி திட்டம் மூலம் கிராமப்புறங்களையும் வங்கி நடைமுறைகள் மற்றும் நிதி சேவைகள் சென்றடையும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியை கண்டு எதிர்கட்சிகளுக்கு பயம் - வானதி சீனிவாசன்
4 தலைமுறைகளாக செய்யாததை 4 ஆண்டில் செய்துவிட்டதால் பிரதமர் மோடியை கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறது என்று வானதி சீனிவாசன் பேசினார்.
2. நெரிசல் இல்லாத போக்குவரத்தே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம் : பிரதமர் பேச்சு
நெரிசல் இல்லாத போக்குவரத்தே பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என பிரதமர் மோடி கூறினார்.
3. பவானி கூடுதுறையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு, பல்வேறு கட்சியினர் அஞ்சலி
பவானி கூடுதுறையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
4. ராமேசுவரம், மதுரையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல், மதுரை வைகை ஆறு ஆகிய இடங்களில் கரைக்கப்பட்டது.
5. தர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி
தர்மபுரி மாவட்ட பா.ஜனதா சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நடந்த அமைதி ஊர்வலத்தில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.