உலக செய்திகள்

9 குழந்தைகள் பாலியல் பலாத்காரம், 3 பேர் கொலை -குற்றவாளிக்கு 12 மரண தண்டனை + "||" + Pakistan: Zainab Ansari's killer gets 12 sentences

9 குழந்தைகள் பாலியல் பலாத்காரம், 3 பேர் கொலை -குற்றவாளிக்கு 12 மரண தண்டனை

9 குழந்தைகள் பாலியல் பலாத்காரம், 3 பேர் கொலை -குற்றவாளிக்கு 12 மரண  தண்டனை
பாகிஸ்தான் நாட்டில் 9 குழந்தைகளை பலாத்காரம் செய்த காமுகனுக்கு 12 மரண தண்டனை விதித்து அங்குள்ள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
லாகூர்

பாகிஸ்தான் நாட்டின் கசூர் நகரை சேர்ந்த சைனப் என்ற  7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றது தொடர்பாக இம்ரான் அலி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இம்ரான் அலிக்கு மரண தண்டனையும், 7 ஆண்டு சிறை தண்டனையும், 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 8 சிறுமிகளை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அதில்  ஆயிஷா,  லைபா மற்றும் நூர் பாத்திமா என்ற 3 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதும் தெரியவந்தது. இந்நிலையில், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் 3 சிறுமிகளை கொன்ற வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 3 சிறுமிகளை கொன்ற வழக்கில் இம்ரான் அலிக்கு 12 மரண தண்டனைகளை  விதித்து உத்தரவிட்டனர்.  ஒவ்வொரு கொலைக்கும் 4 தூக்குதண்டனைகள் விதித்து உள்ளனர். மேலும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தனர். அந்த தொகையில் இருந்து 30 லட்சம் ரூபாயை கொலை செய்யப்பட்ட 3 சிறுமிகளின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை திறக்கப்படுகிறது
சீனா-ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை திறக்கப்படுகிறது
2. ஆண்டில் ஒரே ஒரு இரவு தங்கும் கணவன் 40 வயது 44 குழந்தைகள்! பெண்ணின் சோகக்கதை
ஆண்டில் ஒரே ஒரு இரவு தங்கும் கணவனால் 40 வயதில் 44 குழந்தைகள் பெற்ற பெண்ணின் சோகக்கதை தான் இது.
3. உலகின் ஒரு புதிய மொசைக் வரைபடம் நாடுகளின் சரியான அளவுகளை காட்டுகிறது?
உலகின் ஒரு புதிய மொசைக் வரைபடம் நாடுகளின் சரியான அளவுகளை காட்டுவதாக தகவல்.
4. 900 கற்பழிப்பு- பாலியல் தாக்குதல் உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை
ரஷ்யாவில் தன்னுடைய பாதுகாப்பில் இருந்த 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளை 900க்கும் அதிகமான முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரனை வரலாற்றிலேயே மோசமான ஒரு குற்றவாளி என நீதிமன்றம் கூறியிருக்கிறது.
5. சர்வாதிகாரி ஹிட்லர் ஓரினச்சேர்க்கையாளர்? அமெரிக்க புலனாய்வு அறிக்கை
சர்வாதிகாரி ஹிட்லர் ஓரினச்சேர்க்கை உறவுமுறையை விரும்பினார் என்று அமெரிக்க புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.