உலக செய்திகள்

சவுதி அரேபியாவுக்குகான கனடா தூதர் வெளியேற்றம் + "||" + Saudi Arabia freezes Canada trade ties, recalls envoy

சவுதி அரேபியாவுக்குகான கனடா தூதர் வெளியேற்றம்

சவுதி அரேபியாவுக்குகான கனடா   தூதர் வெளியேற்றம்
சவுதி அரேபியாவில் இருந்து கனடா தூதரை அந்த நாடு வெளியேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவுக்கான கனடா தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் அளித்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

சவுதி-அமெரிக்க பெண்கள் உரிமைகள் பிரச்சாரகர் சமர் பேடாவி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து  கனடாவின் வெளிவிவகார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சவுதி அரேபிய அரசு காரணமின்றி பொதுமக்களை கைது செய்வதும், பெண்களின் உரிமைக்காக போராடியவர்களை கைது செய்து மிரட்டுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் கனடா அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது எனவும், சவுதி அரேபிய அரசு உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், இதுபோன்ற மனித உரிமை போராளிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது.

ஆனால் அதற்கு பதிலளிக்கும் வகையில் கனடாவுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் முடக்க இருப்பதாகவும், புதிதாக இனி எந்த வர்த்தக உறவும் கனடாவுடன் இல்லை எனவும் சவுதி அரேபியா அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. 

அது மட்டுமின்றி சவுதி அரேபியாவின் உள்விவகாரங்களில் கனடா தலையிடுவதாகவும் குற்றஞ்சாட்டி, சவுதி அரேபியாவுக்கான கனடா தூதரை 24 மணி நேரத்தில் நாட்டைவிட்டே வெளியேறவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கனடாவில் உள்ள சவுதி தூதரை திரும்ப அழைத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. கனடா மன்னிப்பு கேட்காதவரை அந்த நாட்டின் மீதான தடையை நீக்க முடியாது-சவுதி அரேபியா
கனடா மன்னிப்பு கேட்காதவரை அந்த நாட்டின் மீதான தடையை நீக்க முடியாது என சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2. சவுதி இளவரசி தங்கியிருந்த ஓட்டலில் கோடி கணக்கிலான நகைகள் கொள்ளை
பிரான்சில் சவுதி இளவரசி தங்கியிருந்த ஓட்டலில் அவரின் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. இந்திய பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு மேலும் சிக்கல் ; ஐரோப்பிய யூனியனையடுத்து சவுதி அரேபியா நடவடிக்கை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்மதி அரிசி ரகங்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிமருந்து தென்பட்டதாக ஐரோப்பிய யூனியன் தேசங்கள் கூறியநிலையில், சவுதிய அரேபியவும் சோதனையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. #BasmatiRice
4. சவுதி அரேபியா, அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்கினால் இந்தியா சலுகைகளை இழக்கும் - ஈரான் தூதர்
சவுதி அரேபியா, அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் இந்தியா சலுகைகளை இழக்கும் என ஈரான் தூதர் கூறியுள்ளார்.
5. எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயார் சவுதி அரேபியா அறிவிப்பு
அமெரிக்காவின் கோரிக்கையை அடுத்து சந்தையை சமம் செய்ய எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயார் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.