தேசிய செய்திகள்

மத்திய மந்திரி கூறியதை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி மத்திய அரசு மீது தாக்கு + "||" + Rahul Gandhi uses Gadkari's 'Where are the jobs' remark to bash Modi govt

மத்திய மந்திரி கூறியதை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி மத்திய அரசு மீது தாக்கு

மத்திய மந்திரி கூறியதை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி மத்திய அரசு மீது தாக்கு
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேலை வாய்ப்புகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டி மத்திய அரசை தாக்கி உள்ளார்.
புதுடெல்லி

சாலை மற்றும்  போக்குவரத்துத் துறை மத்திய மந்திரி நிதின் கட்காரி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம், ஆனால்  வேலைகள் இல்லை. வங்கிகள் ஐடி  நிறுவனங்களில் வேலைகள் குறைந்து விட்டன.  அரசாங்க ஆட்சேர்ப்பு முடங்கி  உள்ளது.  வேலைகள் எங்கே? என குறிப்பிட்டார்.

மேலும் கட்காரி இடஒதுக்கீடு முறை குறித்து பேசும்போது, "இட ஒதுக்கீடு பிரச்சனை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரு அரசியல் ஆர்வமாக வந்துள்ளது. ஒவ்வொருவரும் தாங்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என கூறுகிறார்கள்.  பீகார் மற்றும் உத்தரப் பிரதேசங்களில் பிராமணர்கள் வலுவாக உள்ளனர். அவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள் பின்தங்கியவர்கள் என்று அவர்கள் கூறிக்கொள்கிறார்கள்  "என்று பாஜக மூத்த தலைவர் கட்காரி  கூறினார்.

வேலைகள் குறைந்து வருவதால் வேலைவாய்ப்பு உத்தரவாதமளிக்க முடியாது என \கட்காரி கூறியதை மேற்கோள்காட்டிய  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி... 

மிகச் சிறந்த கேள்வி கட்காரி ஜி! எங்கே வேலை வாய்ப்புகள்  என ஒவ்வொரு இந்தியனும் இதே  கேள்வியைக் கேட்கிறான்?  என ராகுல்காந்தி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. புயல் பாதிப்புகளை பார்வையிட ராகுல்காந்தி வருவார் - திருநாவுக்கரசர் தகவல்
கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட ராகுல்காந்தி வருவார் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
2. நாட்டை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைந்து செயல்பட முடிவு - ராகுல்காந்தி
நாட்டை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
3. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் : ராகுல் காந்தி கருத்து
சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
4. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யக் கோரி முதல்வர் மகன் மனு
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யக் கோரி மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேய சவுகான் புகார் அளித்துள்ளார்.
5. ராகுல்காந்தி பிரசாரத்தில் பலூன் வெடித்த சம்பவம்: மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவு
ராகுல்காந்தி பிரசாரத்தின் போது, பலூன் வெடித்து தீ பற்றிய சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.